கிளிநொச்சி சந்தை வணிகர்களோடு களத்தில் கரச்சி  பிரதேச சபை 

Published By: Priyatharshan

19 Sep, 2016 | 05:35 PM
image

(எஸ்.என். நிபோஜன்)

கிளிநொச்சி பொதுச் சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அனைத்து  உடைமைகளையும்  இழந்து  நிர்க்கதியான  நிலையில் உள்ள பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு அத்தியாவசிய தேவைகளை கரச்சி பிரதேச சபையினர் செய்துவருகின்றனர்.

 

இதேவேளை, அவர்களுக்கு உந்துசக்தியாக  சந்தை வணிகர்கள் மற்றும்  கிளிநொச்சி வணிகர்கள் அவர்களுக்கான உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.

 

இன்றைய தினமும்  கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சனாதனின் முயற்சியில் கரச்சி பிரதேச சபையின்  நிதி உதவியிலும் கிளிநொச்சி வர்த்தகர்களது ஆதரவுடனும் இருபத்து இரண்டு தற்காலிக கடைத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கடைகள் பழக்கடை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு நாளையதினம் மீளவும் பழக்கடைத்  தொகுதி இயங்கவுள்ளது. 

 

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்ப்பட்ட தீவிபத்தின்  போது இராணுவத்தினர், பொலிஸார், கிளிநொச்சி, கரச்சி பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் குறித்த இடத்திற்கு  குறுகிய நேரத்திற்குள் வருகை தந்து உதவிகளைச் செய்தனர்.

இதேவேளை, கரச்சி பிரதேச சபையின் செயலாளர், அவருடன் சில பிரதேச சபையின் பணியாளர்களும் இரவுபகலாக சேவையில் ஈடுபட்டிருந்தனர் அவர்களுக்கு  தமது நன்றிகளை பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59