காவிரி நதியை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 5 ஆம் திகதி விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. 

இதனால் கர்நாடகாவை போராட்டக் களத்துக்கு இட்டுச் சென்றது. இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 7-ஆம் திகதி அதிகாலை 12 மணி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே உச்ச நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, செப்டம்பர் 20-க்குப் பிறகும் காவிரி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.