ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் கொலை : பயங்கரவாதத்தின் புத்துயுரா?

Published By: Digital Desk 2

11 Oct, 2021 | 04:49 PM
image

சண்டே கார்டியன்

ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலினால் 48 மணி நேரத்திற்குள் ஐந்து கொடூரமான கொலைகள் பதிவாகின. 

இதனூடாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் குழப்பத்தையும் தோற்றுவித்துள்ளது. கருத்தியல் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை இழந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் அழிக்கப்பட்ட பயங்கரவாதத்தை புதுப்பிக்கும் வகையில் இந்த இவ்வாறான சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றது. 

கடந்த பல தசாப்தங்களாக, மக்களும் பாதுகாப்புப் படைகளும் பாகிஸ்தானின் சூழ்ச்சிகள் மற்றும் கருத்தியலை பாதுகாப்பு மட்டங்களில் தோற்கடித்தனர். சமீபத்திய கொலைகள்  எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள்  கொல்லப்பட்டதால் இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளின் வெற்றி வெளிப்பட்டது. 

மறுப்புறம் பயங்கரவாத தலைவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு  பல அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்படுகிறார்கள். 

இதன் காரணமாகவே ஜம்மு -காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதே போன்று பாதுகாப்பு படையினருடனான மோதலை தவிர்க்க பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பல வழிகளில் தூண்டியது.

பஞ்சாயத்து மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களின் தேர்தல்கள் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் மக்கள் பெருமளவில் பங்கேற்பது பயங்கரவாதத்தின் சித்தாந்தத்தை தோற்கடித்தது. 

இது பயங்கரவாதிகளின் அடிமட்ட ஆதரவு கட்டமைப்பிற்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது. மேலும் மக்கள் இந்த பயங்கரவாத குழுக்களை  காஷ்மீரின்  எதிரிகளாக மக்கள் குற்றம் சாட்டினர். 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டு 'ஒப்பரேஷன் ஆல் அவுட்' தொடங்கியதிலிருந்து ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 முதலில், பயங்கரவாத அனுதாபிகள் மற்றும் நிதியாளர்கள் மீதான அதிகரித்த அடக்குமுறை காரணமாக, புதிய ஆட்சேர்ப்பு பாதிக்கப்பட்டது.

இரண்டாவதாக, கட்டுப்பாட்டு எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு  மூன்று அடுக்கு பாதுகாப்பு நிலைப்பாடு  முன்னெடுக்கப்பட்டு பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கிடைப்பது தடுக்கப்பட்டது.  

மூன்றாவதாக, தீவிர விரக்தியிலிருந்த காஷ்மீர் பண்டிதர்கள், அரசியல் தலைவர்கள்  மற்றும் விரக்தியில் உள்ள சமூகத் தலைவர்கள் போன்றவர்கள் பயங்கரவாத குழுக்களின் இலக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.  

காஷ்மீர் மீண்டும் அமைதிக்கு திரும்புவது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வலியாகியது.

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் வளர முடியாது என்பதை மக்களும் புரிந்து கொண்டனர். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச மயமாக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய வலியாகியது. 

ஒரு வகுப்புவாத பிளவை உருவாக்குவதன் மூலம், ஜம்மு -காஷ்மீரில் இறந்து கொண்டிருக்கும் பயங்கரவாதத்திற்கு இன்னும் சில நாட்கள் வாழ்நாள் கொடுக்கவே பாக். விரும்புவதாக காஷ்மீரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்ரீநகரில் ஒரு தொழிலதிபர் மாகன் லால் பிந்த்ரூ உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியை பயங்கரவாதிகள் தாக்கி அனைத்து ஊழியர்களின் அடையாள அட்டைகளையும் பார்த்து அதிபரையும் ஒரு ஆசிரியரையும் கொன்றனர். 

இந்த வகையான பயங்கரவாதம் புதியதல்ல. அவர்களின் தந்திரம்- 'ஒருவரைக் கொன்று ஆயிரத்தை பயமுறுத்துங்கள்  என்பதாகும்.

கடந்த சில மாதங்களில் பல சம்பவங்கள் நடந்தன, இது பயங்கரவாதத்தை புதுப்பிக்க ஒரு புதிய வியூகத்தை சிந்திக்க பயங்கரவாத குற்றவாளிகளை மேற்கு எல்லையத்தப்பட்டனர். 

தேசியக் கொடியை ஏற்றுவது கூட முடியாத ஸ்ரீநகரில் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஜன்மாஷ்டமி ஊர்வலங்கள் இடம்பெற்றன.

கணிசமான எண்ணிக்கையிலான காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். ஸ்ரீநகர் முந்தைய ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. 

இரு சமூகங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வு நிலைநாட்டப்பட்டது . அதனால் பயங்கரவாதிகள் கவலைப்படுவது இயற்கையானது.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜம்மு -காஷ்மீரில் நடந்த அனைத்து தாக்குதல் குறித்து தீவிர கவனத்தை கொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினர் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளனர். தேடுதல்களின் போது தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள்  அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆயுதக் கிடங்குகளிலும் மிகப் பெரிய பகுதி கைத்துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளாகவே காணப்பட்டது. எளிதில் சிக்கி விட கூடாது என்ற  பயங்கரவாத கோட்பாட்டைக் குறிக்கிறது.

அமைதியை விரும்பும் காஷ்மீரிகளால் பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடாக கருதப்படுகிறது, எனவே அவர் காஷ்மீரிகளால் வில்லன் என்று வர்ணிக்கப்படுகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13