தொங்கு பாலத்தில் கம்பிகள் மீது நடக்கும் அவல நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்

Published By: Digital Desk 2

11 Oct, 2021 | 03:12 PM
image

எம்.மனோசித்ரா

மலையகம் , பெருந்தோட்டப் பகுதிகள் என்றாலே பச்சை பசும் தேயிலை மலைகள், நீண்ட இறப்பர் மரங்கள் என எழில் கொஞ்சும் இயற்கை அழகும் தாவி பாயும் நீர்வீழ்ச்சிகளுமே ஞாபகத்திற்கு வரும். ஆனால் அங்கு வாழும் மக்கள் இன்றும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழும் சோகமான வாழ்வு பற்றி  பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏற்கனவே கடும் வெயில் மற்றும் குளிருக்கு மத்தியில் சிறுத்தை , அட்டை , பாம்பு, குளவி தாக்குதல்களுக்கும் உள்ளாகி பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே மலையகம் வாழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அன்றாட தொழிலுக்குச் செல்கின்றனர். இந்நிலையில் மஸ்கெலியா - சாமிமலை கவரவில தோட்டத்தில் வாழும் தொழிலாளர்கள் தினமும் தேயிலை கொழுந்து கூடையையும் சுமந்து , ஒற்றை கம்பியைக் கொண்ட பாலத்தில் பயணித்து உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொழிலுக்குச் செல்கின்றனர்.

கவரவில தோட்டத்தில் உள்ள இந்த பிரதான பாலத்தில் தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான முறையில் இந்த பாலத்தில் நடந்து செல்கின்றனர். இப்பாலம் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனை தினமும் பல தொழிலாளர்கள் , பாடசாலை மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

தலையில் கொழுந்து கூடையின் பாரத்தை சுமந்துகொண்டு மிகவும் ஆபத்தான முறையில் இந்த பாலத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கும் இந்த கிராம மக்கள் , இதனை புனரமைத்து தருமாறு அரசியல்வாதிகள், தோட்டநிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பலரிடம் முறையிட்ட போதும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

மழைக் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்த பாலத்தில் பயணித்தோர் கால் இடரி ஆற்றில் விழுந்து படுகாயமடைந்துள்ளதாகவும் தொழிலுக்கு செல்வோரும் பாடசாலை மாணவர்களும் இதனால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். வெயில் காலங்களில் ஆற்றை கடந்து செல்கின்ற போதும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இந்த கம்பியின் ஊடாகவே நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மிகவும் ஆபத்துடைய இந்த பாலத்தை பயன்படுத்தாமல் பிரதான வீதியை பயன்படுத்த முடியுமல்லவா என்று பலர் கேட்கக் கூடும். ஆனால் இந்த பாலத்தினூடாக கடக்கும் தூரத்தை பிரதான வீதியூடாக கடக்க முற்படும் போது மேலதிகமாக அரை மணித்தியாலம் செல்லும் என்றும் , இதனால் தொழிலுக்கும் தமது பிள்ளைகளுக்கு பாடசாலைகளுக்கும் செல்வதில் தாமதம் ஏற்படும் என்றும்  இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

நகரங்களில் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கும் அரசாங்கம், தமது ஆபத்தான வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இம்மக்களின் கோரிக்கையாகவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16