ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச 

Published By: Digital Desk 3

11 Oct, 2021 | 10:58 AM
image

(ஆர்.யசி)

நாட்டுக்காக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது, அமைச்சரவை பத்திரங்களை ஒரே நாளில் சமர்ப்பித்து நிறைவெற்றாது, அதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கி, கலந்துரையாடி, பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசிமானது என்றும், கூட்டுத் தீர்மானங்களை எடுக்கும் போது, கட்சித் தலைவர்கள் கூட்டம் போன்றவற்றில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் அமைச்சரவையில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து தெளிவுப்படுத்தும் வகையிலேயே அவர் அந்தப் பதிவை இட்டுள்ளார்.

இதில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைய காரணம், அவர்கள் எதிர்பார்ப்பவற்றை செய்யாமை அல்ல. எதிர்பார்க்காதவற்றை செய்வதே ஆகும். அடிக்கடி அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் உருவாகும்  மக்களிடையேயான நம்பிக்கையின்மையை தோற்கடித்து, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும்.

நாட்டுக்காக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது, அமைச்சரவை பத்திரங்களை ஒரே நாளில் சமர்ப்பித்து நிறைவெற்றாது, அதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கி, கலந்துரையாடி, பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். தற்போதைய ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசிமானது என்றும், கூட்டுத் தீர்மானங்களை எடுக்கும் போது, கட்சித் தலைவர்கள் கூட்டம் போன்றவற்றில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

இவ்வாறு ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09