9 ஆவது தடவையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது சென்னை

Published By: Vishnu

11 Oct, 2021 | 08:01 AM
image

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆவது முறையாகவும் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

2021 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்றில் ரிஷாட் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை டெல்லி அணிக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.

டெல்லி அணி சார்பில் அதிகபடியாக பிரித்வி ஷா 60 ஓட்டங்களையும் (34), ரிஷாட் பந்த் 51 (35) ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மேயர் 37 (24) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

173 என்ற கடினமாக இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் முதல் விக்கெட் மூன்று ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

அதன்படி அன்ரிச் நார்ட்ஜேயின் முதல் ஓவரில் டூப்பிளஸ்ஸி ஒரு ஓட்டத்துடன் போல்ட் ஆனார்.

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கை கோர்த்து டெல்லி அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தனர்.

அதனால் சென்னை 13 ஓவர்கள் நிறைவில் 111 ஓட்டங்களை குவித்தது. உத்தப்பா 62 ஓட்டங்களுடனும், ருதுராஜ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

எனினும் 13.3 ஆவது ஓவரில் உத்தப்பா டோம் கர்ரனின் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் பிடிகொடுத்து 63 (43) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சர்துல் தகூரும் அதே ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் ஆனார்.

அவரின் வெளியேற்றத்தை அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆக, 18.1 ஆவது ஓவரில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ருதுராஜ் 70 (50) ஓட்டங்களுடன் ஆவேஸ் கானின் பந்து வீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 18.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக மஹேந்திர சிங் தோனியும், மொய்ன் அலியும் கைகோர்த்தாட 19 ஓவர்கள் நிறைவில் 160 ஓட்டங்களை பெற்றது சென்னை.

இறுதி ஓவருக்கு 13 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க, இறுதி ஓவருக்காக டோம் கர்ரன் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரின் முதல் பந்து வீச்சில் மொய்ன் அலி 16 ஓட்டங்களுடன் ரபடாவிடம் பிடிகொடுக்க, ஜடேஜா ஆடுகளம் நுழைந்தார்.

மறுபக்கம் தோனி இறுதி ஓவரின் அடுத்த மூன்று பந்துகளையும் எதிர்கொண்டு அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் சென்னை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இதன்மூலம் சென்னை அணி 9 ஆவது முறையாக ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  இதற்கு முன் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. 

இதில் 3 முறை (2010, 2011, 2018) கிண்ணத்தை வென்று இருந்தது.

இதேவேளை இன்று சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் மோதும். 

அந்த போட்டி நாளை மறுதினம் நடைபெறும்.

Photo Credit : IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09