புதிய அரசியலமைப்பு நாட்டை கூறுபோடாதென இனவாதத்தை தூண்டாதென நினைக்கும் மகாநாயக்க தேரர்களினது கருத்துக்களுக்கு நவம்பர் மாதம் தெளிவான பதில் கிடைத்துவிடும். அப்போது நான் கூறியது தவறா அல்லது சரியா என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். அரசுக்கெதிராக எந்தவொரு கருத்தையும் சுதந்திரமாக தெரிவிக்ககூடிய மகாநாயக்க தேரர்கள் அப்போதாவது இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என நினைக்கின்றோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

மேலும் புலம்பெயர் அமைப்புக்களின் துணையுடனும் சர்வதேச அமைப்புக்களின் அணுசரணையின் அடிப்படையில் பலமான தமிழ் அமைப்புக்களின் ஆதரவாளனாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிவ்யோர்க்கிற்கு பயணமாகியுள்ளதாகவும் அங்கு அமெரிக்காவின் தேவைகளையும் தமிழ்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.