20 ஆவது திருத்த தோல்விக்கு ஜனாதிபதி ஒப்புதலளிப்பு : 19 இல் ஆட்சியை தொடருங்கள் - ரணில்

Published By: Gayathri

10 Oct, 2021 | 06:01 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் முன்வந்து ஏனைய அனுபவம் மிக்க அமைச்சர்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளதன் மூலம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தோல்வியடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். 

எனவே 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை நிர்வகித்துச் செல்லவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளி பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது அவருக்கு அரசியல் அனுபவம் வரையறுக்கப்பட்டவை என்றும், எனவே பிரதமர் முன்வந்து அரசியல் அனுபவம் மிக்க அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இது சிறந்தவொரு நிலைப்பாடாகும். காரணம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோல்வி என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்த திருத்தத்தின் காரணமாக அமைச்சரவை அரசியலமைப்பு இல்லாமல் போனது. பொருளாதாரத்திலும் கொரோனாவிலும் அரசாங்கத்திற்குள் ஒரு அரசாங்கம் காணப்பட்டது. 

அதேபோன்று அரிசி விலை தொடர்பிலும் அரசாங்கத்திற்கு வெளியில் அரசாங்கமொன்று காணப்பட்டது. 

இதன் பிரதிபலன் என்ன? நாட்டின் பொருளாதாரம் முழுமையாக இல்லாமல் போனது. எதிர்பார்ப்புக்கள் சரிவடைந்தன. அவ்வாறெனில் இந்த முறைமையின் மூலமாக சாதகமான பிரதிபலன் கிடைக்கவில்லை.

எனவே ஜனாதிபதி தெரிவித்ததைப் போன்று சம்பிரதாய அமைச்சரவை நிர்வாகத்திற்கு செல்வது சிறந்தது. 

எனவே 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை நிர்வகித்துச்செல்ல வேண்டும். 

ஜனாதிபதியும் 19 ஆவது திருத்தத்தின் கீழேயே தெரிவு செய்யப்பட்டார். அதே போன்று பாராளுமன்றமும் 19 ஆவது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்காகவே தெரிவு செய்யப்பட்டது.

19 ஆவது திரு்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும். 20 ஆவது திருத்தத்தின் காரணமாகவே பாராளுமன்றம் பிளவடைந்தது. 

எனவேதான் எதிர்க்கட்சி மற்றும் அதற்கு அப்பாற்பட்டவர்களின் நம்பிக்கை குறைவடைந்தது. அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை முன்வைக்குமாயின், அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டி பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். இது எம் அனைவருக்கும் பொறுந்தும். 

அதே போன்று கொவிட் தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டியதும் அத்தியாவசியமாகும். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

எம்மால் இதனை செய்ய முடியுமெனில் சிறுபான்மையினரதும் பிரச்சினைகளை தீர்த்து வலுவாக இலங்கையின் எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

எனவே 20 ஆவது திருத்தம் தோல்வி என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளமையை வரவேற்கின்றேன். அதற்கேற்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தின் கீழ் இதனை விட சிறந்த சூழலை உருவாக்குவோம். முழு பாராளுமன்றமும் ஒன்றிணைந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்போம் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32