இராணுவப் பிரசன்னத்தைக் கோருவதன் பின்னணி என்ன ?

Published By: Digital Desk 2

10 Oct, 2021 | 06:00 PM
image

சிவலிங்கம்  சிவகுமாரன்

 பெருந்தோட்டப்பகுதிகளில்ஆயிரம் ரூபா நாட்சம்பளமானது, சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்ட காலத்திலிருந்து,தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் முரண்பாடுகள் அதிகரித்து தற்போது உச்சநிலையை எட்டியுள்ளன.

தோட்ட முகாமையாளர்கள், சேவையாளர்களுக்கும்தோட்டத்தொழிலாளர்களுக்குமிடையிலான இந்த சம்பள முரண்பாடுகள், வாய்த் தர்க்கத்தில் ஆரம்பித்து கைகலப்புகள் வரை சென்று பின்பு பொலிஸ் முறைப்பாடு,கைதுகள், தடுத்து வைப்பு, வழக்கு விசாரணை என தொடர்கின்றன.

ஆனால் தொழிற்சங்கங்களோ அரசாங்கமோஇவற்றை கண்டு கொள்வதில்லை. ஆயிரம் ரூபா பிரச்சினை தீர்ந்து விட்டது என  இருதரப்பினரும் மறுபக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு சம்பவங்களைகண்டும் காணாதது போன்றும் கடந்து செல்கின்றனர். 

நீதிமன்றில் வழக்கு இருப்பதைகாரணம் காட்டியே இவர்களின் மெளனமும் அலட்சியம் தொடந்தாலும் மறுபக்கம் தொழிலாளர்களின்தொழில் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விடயத்தை பிரதானமாக வைத்தாவது ஏதாவது பேசப்படுகின்றதாஎன்றால் அதுவும் இல்லை.சில வாரங்களுக்கு முன்புதலவாக்கலை பிரதேச கட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு அடிப்படை காரணமேஇந்த சம்பள  விவகாரமேயாகும். 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமேஆயிரம் ரூபா நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. 

அதற்கு ஒரு கிலோ குறைவாக இருந்தால் பறிக்கப்படும்கொழுந்தின் எடைக்கேற்ப, கொழுந்து ஒரு கிலோவுக்கு வழங்கப்படும் 40 ரூபா படியே தொழிலாளர்களுக்குவழங்கப்படுகின்றது.

அதேவேளை ஆண் தொழிலாளர்கள்மாலை 4 மணி வரை பணிபுரியாவிட்டால் அரை சம்பளமே வழங்கப்படுகின்றது. ஒருநாளைக்கு 15 கிலோ வரை பறிக்கப்படும் கொழுந்தில் கழிவுக்காக ஒரு தொழிலாளியிடமிருந்துசம்பளம் குறைக்கப்படுகின்றது. 

அப்படிப் பார்க்கும் போது ஒருதொழிலாளி தினந்தோறும் 35 கிலோ வரை பறிக்க வேண்டியுள்ளது. கழிக்கப்படும் கொழுந்து தொழிற்சாலைக்கேஅனுப்பப்படுகின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48