பால்மா, சீமெந்து மற்றும் எரிவாயு தடுப்பாடு என்பன தற்காலிக பிரச்சினையே - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published By: Vishnu

10 Oct, 2021 | 03:09 PM
image

பால்மா, சீமெந்து மற்றும் எரிவாயு தடுப்பாடு என்பன தற்காலிக பிரச்சினையே எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த சில நாட்களில் இப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

May be an image of 1 person, standing and indoor

பால் மா, சீமெந்து மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன ஒரு தற்காலிக பிரச்சனை. இந்த கொவிட் நெருக்கடியிலிருந்து நாம்  சாகாமல் தப்பித்தால் அதுவே  போதும். 

எங்கள் டொலர் கை இருப்பு குறைந்து வருவதை நாங்கள் அறிவோம். பிரச்சினைகள் வந்தன. ஆனால் இந்த அரசாங்கம் மக்களை  இறக்க  இடமளிக்கவில்லை. இவை அனைத்தும் தற்காலிக பிரச்சினைகள். விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் பால் மா  கிடைக்கும். எரிவாயு  வந்துவிடும். இந்த பிரச்சினைகள் கொவிட் ஏற்படுத்திய தற்காலிக பிரச்சனைகள் மட்டுமே என்றும் கூறினார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின்படி,  மனைப்  பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை  மேம்படுத்தி குடும்ப அலகுகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நீரியல் வள  தொழில்முயற்சி திட்டங்களை  செயல்படுத்தும்  குருணாகல் மாவட்ட நிகழ்வு ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில்  நேற்று குருணாகல் மாகாண சபை  கேட்போர் கூடத்தில்   நடைபெற்றது.

இந்தத நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது எமது நாட்டு மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்த அமைச்சர்,

எதுவும்  அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இவர்கள்  முதலீட்டாளர்கள். மின்சார கட்டணம் குறைந்தால், தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் இலங்கையில் அறிவிடப்படுகையில்  அது குறைந்தால் அது  எவ்வளவு நல்ல விடயம். இந்த விலை  குறைப்பு  தான் மின்நிலையங்களை  அமெரிக்காவிற்கு கொடுப்பதாக காட்ட முயல்கின்றனர். அவர்கள்  பட்டம் தயாரிக்கிறார்கள்.  ஜனாதிபதி மிகவும் சரியான முடிவை எடுத்துள்ளார்.  

கொவிட்  நெருக்கடி இருந்தபோதிலும் இந்த நாட்டில் முதலீட்டாளர்களின் வருவது தொடர்பாக நாம்    மகிழ்ச்சியடைய  வேண்டும்.  

முதலீட்டாளர்களுக்கு  இந்த அரசாங்கத்தின் மீது  நம்பிக்கையில்லை என்று  எதிர்க்கட்சி கூறுகிறது. ஆனால் இப்போது முதலீட்டாளர்கள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். வீதிகளை நிர்மாணிக்க உலக வங்கி அரை பில்லியன்  டொலர்களை கடனாக வழங்கியது. எனவே, அவர்கள் இந்த நாட்டின் மீது  நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை  குழப்புவதற்காக  எதிர்க்கட்சிகள் கதைகளை கட்டிவிடுகின்றன என்றார்.

இந்த நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர,குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58