டயனா எம்.பி.யை நீக்குமாறு எந்தவித கடிதமும் கிடைக்கவில்லை : தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 2

10 Oct, 2021 | 11:36 AM
image

ஆர்.ராம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேயை பதவிலியிருந்து நீக்குமாறு எவ்விதமான கடிதங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை என்று அதன் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

டயனா கமகேயை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. 

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடத்தில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி குறித்த உறுப்பினரை நீக்குமாறு கோரி எமக்கு கடிதம் அனுப்பியதாக ஊடகங்கள் வாயிலாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிந்துகொண்டது. 

ஆனால் வெள்ளிக்கிழமை மாலை வரையில் அவ்விதமான எந்தவொரு கடிதமும் எமக்கு கிடைத்திருக்கவில்லை என்றார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இவ்வியடம் தொடர்பில் வினவியபோதும் அவர்களிடத்திலிருந்து தெளிவானதொரு பதில் கிடைக்கவில்லை. 

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரை செய்தி அச்சுக்கு செல்லும் வரையில் தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02