கொழும்ப கெப்பட்டிபொல மாவத்தையில் வைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு பொலிஸ் அதிகாரிகளின் குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் எதுவுமில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரது வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் விபத்து ஏற்படும் போது வாகனத்தில் குறித்த இருவரும் இருந்திருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.