ரிஷாத்தின் பிணை கோரிக்கை : 14 ஆம் திகதியன்று வாதங்கள், சட்ட மா அதிபரும் இணக்கம்

Published By: Digital Desk 2

09 Oct, 2021 | 11:56 AM
image

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பிலான வாதங்களை  எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

நேற்று இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் ரிஷாத் தரப்பின் சட்டத்தரணிகளின் இணக்கத்துடன் இந்த திகதி குறிக்கப்பட்டுள்ளது.

  நேற்றைய தினம்  ரிஷாத் பதியுதீன் சார்பில் பிணை கோரி வாதங்களை முன் வைக்க ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையில்  சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவினர் தயாராக  ஆஜராகினர்.  

இந்நிலையில் கடந்த மூன்று முறை மன்றில் ஆஜராகாத சட்ட மா அதிபர்  சார்பான பிரதிநித்துவத்துக்கான குறை நேற்று காணப்படவில்லை. சட்ட மா அதிபர் சார்பில் நேற்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன்  மன்றில்  ஆஜரானார்.

 இந்நிலையில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், எதிர்வரும் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றில் ரிஷாத் பதியுதீன் விவகார  அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு வரும் நிலையில்,கால அவகாசத்தை தருமாறு கோரினார்.

 அதன்படி ரிஷாத்துக்கு பிணைக் கோரும் வாதங்களை முன் வைக்கும் திகதி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவை நேற்று, கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில்  மீள விசாரணைக்கு வந்தது.

அதில் 7 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே வேறு குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 இந் நிலையில் நேற்றைய தினம் 7 ஆவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆஜரானார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43