தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 76 பேர் கைது

09 Oct, 2021 | 11:11 AM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 76 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 80 360 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவை தவிர சோதனைகளின் பின்னர் 535 வாகனங்களில் பயணித்த 870 பேர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று 895 வாகனங்களில் பயணித்த 1765 பேர் மேல் மாகாணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்