மாரவில வைத்தியசாலையின் வாயிற்காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் நோயாளர்களை பார்வையிடும் நேரம் கடந்த பின்னர் வைத்தியசாலையில் நுளைய முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரை தடுத்த வாயிற்காவலரை அவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்  முடுகட்டுவ பகுதியைச் சேர்ந்தவரெனவும், அவரை இன்று மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.