சேதன உர விவகாரத்தால் கொழும்பு - பெய்ஜிங் இடையில் சலசலப்பு  

09 Oct, 2021 | 10:08 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்த சேதன  உரத்திற்கு இலங்கை தடைவிதித்துள்ளது. மிகவும் அபாயகரமான பற்றீரியாக்கள் சீன சேதன உரத்தில் இருந்தமை கண்டயறிப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இலங்கை அரசு குறித்த உரத்தினை இறக்குமதி செய்யாது தடை விதித்தது. 

இந்த அறிவிப்பை அடுத்து சீனா பெரும் அசௌரியங்களை எதிர்கொண்ட நிலையில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தீர்மானத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு கடிதமும் அனுப்பியது.

எவ்வாறாயினும் முதல் தடவை மேற்கொள்ளப்பட்ட சீன சேதன உரம் மீதான தரம் குறித்து சோதனையின் போது வியசாயத்திற்கும்  மக்களுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்த கூடிய பற்றீரியாக்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து அந்த சேதன உரத்தை நிராகரித்து. அடுத்தப்படியாக சீனா மற்றுமொரு  தொகுதி சேதன உரத்தை  அனுப்பியதுடன் அதனை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலும் குறித்த ஆபத்தான பற்றீரியாக்கள் இருந்துள்ளன.

இதன் பின்னரே அரசாங்கம் தடை உத்தரவை பிறப்பித்தது. உரத்தின் தரத்தை மேற்கோள்காட்டி நிராகரித்தமையால் சீனா பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. 

சீன சேதன உரம் மீதான சோதனைகளில் எர்வினியா ( Erwinia ) என்ற பற்றீரியா கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இது முதன் முறையாக சோதனைக்கு உட்படுத்திய போது வெளிப்பட்ட பற்றீரியாவாகும். ஆனால் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட பற்றீரியா குறித்து தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.

எர்வினியா என்ற பற்றீரியாவனது ஒரு மோசமான தாவர நோய்க்கிருமி என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அறுவடைக்கு பின்  கடுமையான இழப்புகளேயே குறித்த பற்றீரியா ஏற்படுத்தும். இந்நிலையில் இலங்கையின் தீர்மானத்தின் ஊடாக 63,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 99 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் திடீர் முடிவால் கொழும்பு - பெய்ஜிங் இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சீன உரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தேசிய மட்டத்தில் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. 

மறுப்புறம் தேயிலை உட்பட விவசாய உற்பத்திகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உரம் தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டுள்ளது. உரிய வகையில் உரம் கிடைக்காமல் போனால் அடுத்த மாதமளவில் உற்பத்தி வீழ்ச்சியடையும்எனவும் குறிப்பிடுகின்றனர்.

எர்வினியா  போன்ற பற்றீரியாக்கள் அடங்கிய உரத்தினை பயன்படுத்துவது ஊடாக விவசாயம் பாதிக்கப்படுவதோடு பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிக அளவில் வளர்க்கப்படும் வேர் பயிர்களையும் கடுமையாக பாதிக்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அறுவடைக்கு பின்னரே இந்த நோய்க்கிருமியின் விளைவைக் காணலாம்எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை வேளாண்மைக்கு முழுமையான மாற்றம்பெருவது என்பது எளிதான விடயமல்ல. பல காலக்கட்டங்களாக வகுக்கப்பட்ட நீண்டகால திட்டங்கள் ஊடாகவே அது சாத்தியமாகும். அவசரமாக இரசாயண உரம் தடைச்செய்யதமையினால் செப்டம்பர் மாத போகத்தில் விவசாய்களுக்கு உரம் கிடைக்க வில்லை. சீனாவின் சேதன உரங்களை நம்பி அரசாங்கம் எடுத்த தீர்மானமானது விவசாய்களுடன் முரண்பட வைத்துள்ளது.

சீன சேதன உரத்தின் இரண்டு மாதிரிகளிலுமே தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நோய்க்கிருமிகள் மற்றும் மண், தாவரங்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே தான் உடனடி தடைக்கும் மாற்று திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. மறுப்புறம் சீனாவின் நகர்ப்புற கழிவுகள் சேதன உரம் என்ற போர்வையில் நாட்டில் கொட்டுவதற்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21