கர்ப்பிணிகளிடத்தில் கொவிட் தொற்று பரவும் வீதம் குறைவு ; விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா

Published By: Digital Desk 4

09 Oct, 2021 | 07:09 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 90 - 95 சதவீதமான கர்ப்பிணிகளுக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கர்ப்பிணிகளிடத்தில் கொவிட் தொற்று பரவும் வீதமும் குறைவடைந்துள்ளது.

பெருமளவான கர்ப்பிணிகள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமை இந்த வீழ்ச்சியில் தாக்கம் செலுத்துவதாக விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் 90 - 95 சதவீதமான கர்பிணிகளுக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கர்ப்பிணிகளிடத்தில் கொவிட் தொற்று பரவும் வீதமும் குறைவடைந்துள்ளது.

முதலாம் அலையிலிருந்து இதுவரையில் 8500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கொவிட் தொற்றாளர்கள் மற்றும் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள கனிசமானளவு வீழ்ச்சிக்கு சமாந்தரமாக கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாதல் மற்றும் உயிரிழத்தல் என்பனவும் குறைவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். பெருமளவான கர்ப்பிணிகள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமையும் இந்த வீழ்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட கர்ப்பிணிகள் குழந்தையை பிரசவித்ததன் பின்னர் ஒரு மாத காலத்திற்கு அவர்கள் தொடர்பில் கண்காணிப்புடனேயே இருப்போம்.

அவ்வாறு இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களில் எந்தவொரு கர்பிணிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27