இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் - உலக வங்கி

Published By: Digital Desk 4

08 Oct, 2021 | 04:18 PM
image

(நா.தனுஜா)

இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

Articles Tagged Under: உலக வங்கி | Virakesari.lk

இருப்பினும் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மற்றும் கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக நடுத்தரகால மதிப்பீடுகள் மந்தகரமான நிலையில் காணப்படுவதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசியப்பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலைவரம், கொவிட் - 19 தொற்றுப்பரவலுக்கு முன்னராக காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றும் உலக வங்கியினால் வருடாந்தம் இருமுறை வெளியிடப்படுகின்ற பிராந்திய ரீதியான மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 'டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் சேவை வழங்கல் அபிவிருத்தி' என்பன குறித்த பிரத்யேக அவதானத்துடன் தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கியினால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்காசியப் பிராந்தியத்தின் வருடாந்த சராசரி பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக அமையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

'கொவிட் - 19 தொற்றுப்பரவலானது பிராந்தியப் பொருளாதாரத்தில் நீண்டகால வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இக்காலப்பகுதியில் பல நாடுகள் மிகக்குறைந்தளவிலான முதலீடு அல்லது முதலீட்டு வீழ்ச்சி, நிரம்பல் சங்கிலி சீர்குலைவு, மனிதவள முதலீட்டில் பின்னடைவு, கடனளவில் வெகுவான அதிகரிப்பு ஆகியவற்றுக்கு முகங்கொடுத்திருக்கின்றன.

இவ்வாண்டில் தெற்காசியப்பிராந்தியத்தில் 48 - 59 மில்லியன் மக்கள் வறியவர்களாக மாறுவதற்கும் வறுமை நிலையிலேயே இருப்பதற்கும் கொவிட் - 19 தொற்றுப்பரவல் காரணமாகியுள்ளது' என்று உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதமானோருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும் தற்போது புதிய வைரஸ் பரவல் அலைகள் உருவாகுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ள உலக வங்கி, இவை பொருளாதார மீட்சியை இலகுபடுத்தக்கூடும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கொவிட் - 19 பரவலானது கல்விச்செயற்பாடுகளில் மிகப்பாரிய இடையூறுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும், கல்வியைப் பெறுவதில் ஏற்பட்ட இழப்புக்கள் நாட்டின் மனித மூலதன அடைவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

மேலும் உயர் கடன்சுமை, பெருமளவான நிதிமீள்செலுத்துகை தேவைப்பாடு, ஸ்திரமற்ற வெளியக இருப்புக்கள் உள்ளடங்கலாக பெரும்பாகப் பொருளாதாரச் சவால்களுக்கு இலங்கை தொடர்ந்தும் முகங்கொடுத்துள்ள நிலையில், அவை நடுத்தரகாலத்திற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையைக் குறைத்தல் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகமுக்கிய காரணியாக அமையும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04