18 - 19 வயதுடையவர்களுக்கு திங்கள் முதல் ஃபைசர் தடுப்பூசி

Published By: Vishnu

08 Oct, 2021 | 07:40 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

15 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இதுவரையில் இவ்வாறான சுமார் 10,000 சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

அதனடிப்படையில் தற்போது 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் கூடிய தொழிநுட்ப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன் போது 18 மற்றும் 19 வயதுடைய சிறுவர்களுக்கு அதாவது உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச, மாவட்ட, போதனா மற்றும் தேசிய வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26