தூய அரசியலை உருவாக்க பெண்களின் பங்களிப்பு முக்கியமாகும் - பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் 

Published By: Digital Desk 2

07 Oct, 2021 | 09:54 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

 பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்காத, தூய அரசியல் சிந்தனையைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றக் கூடிய அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமாகும். அவர்களின் ஊடாக நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை  மாற்றியமைக்க முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நம்பிக்கைத் தெரிவித்தார்.

 இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக பெண்களை மையப்படுத்தி பெப்ரல் அமைப்பினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மாற்றத்திற்கான பாதை' எனும் வேலைத்திட்டத்தை  ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தியது. இதற்கான ஊடகச் சந்திப்பு கொழும்பிலுள்ள அதன் அலுவல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 இவ்விடயம் குறித்து தெளிவுப்படுத்திய ரோஹன ஹெட்டியாராச்சி,

 " எமது நாட்டில் 52 சதவீதமான பெண்கள் காணப்படுகின்றனர். எனினும்,  பெண்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றில் 5 சதவீதமும், உள்ளூராட்சி மன்றங்களில் 23 சதவீதமாகவும் காணப்படுகின்றன. இது ஏனைய நாடுகளை விடவும் மிகவும் குறைவாகும். 

 எமது நாட்டில் ஒரு வளமான சமூக அரசியல் கலாச்சாரத்தை  உருவாக்க வேண்டுமானால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூக நல்லுணர்வு உள்ளவர்களாக திகழும் ஆர்வமுள்ள பெண்கள் முன்வர வேண்டும். 

மேலும், பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்காத, தூய அரசியல் சிந்தனையைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றக் கூடிய அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமாகும்.

 இவ்வாறு சமூக அக்கறை உள்ள பெண்களை எம்மால்  ஆரம்பிக்கப்படவுள்ள 'மாற்றத்திற்கான பாதை'   வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு  நாட்டிலுள்ள சகல ஆர்வமுள்ள பெண்களிடம் கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பங்களிலிருந்து அரசியல் உணர்வு, சமூக அக்கறை மற்றும் நற்குணம் படைத்த 100 பெண்களை  மாற்றத்துக்கான பாதை எனும் கற்றை நெறிக்கு  தேர்ந்தெடுக்கவுள்ளோம்.

 விண்ணப்பங்கள் ஊடாக தெரிவு செய்யப்படும் 100 பெண்களை ஊடகங்கள் வாயிலாக முழு நாட்டுக்கும் அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களுக்கான கற்கை நெறியின் முடிவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். 

 இதற்கான விண்ணப்பத்தை எமது இணையத்தளமான www.paffrel.com  பெற்றுக்கொள்ள முடியும், மேலதிக தகவல்களுக்கு 0767873144 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம். என்றார்.

 இந்த மாற்றத்திற்கான பாதை வேலைத்திட்டத்தின் ஆலோசகர்களாக  முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், இராஜங்கஅமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர், ரோஹினி கவிரத்ன உள்ளிட்டவர்களுடன், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58