இராஜதந்திர ரீதியான விடயத்தில் வெளிநாடுகளில் இலங்கை அரசாங்கம் தோல்வியை சந்தித்து இருக்கின்றன - இரா துரைரட்ணம்

Published By: Digital Desk 3

07 Oct, 2021 | 01:51 PM
image

கடந்த ஒரு மாதத்திற்குள் சர்வதேச ரீதியான இராஜதந்திர அழுத்தத்திற்கு இலங்கை அரசு  உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் செயல் வடிவங்கள் இலங்கை அரசாங்கம் தொடர்பாக ஒரு நிர்வாக ரீதியான செயல் வடிவத்தை இலங்கைக்குள் செய்யக் கூடியவாறு தோற்றம் பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர ரீதியான விடயத்தில் வெளிநாடுகளில்   இலங்கை அரசாங்கம் தோல்வியை சந்தித்து இருக்கின்றன என்று முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரட்ணம் தெரிவித்துள்ளர்.

இன்று இடம்பற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் இந்தியா தொடர்பான தனது கொள்கை  சம்பந்தப்பட்ட விடயத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கு இடையில் இந்திய அரசின் வருகைக்குப்பின்  இந்தியா  சம்பந்தப்பட்ட விடயங்களில்  பல மாற்றங்கள் முடிவுகளை எடுக்கபட்டுள்ளன.

புலம்பெயர்ந்த சக்திகளுடன் இலங்கை அரசு ஜனாதிபதி அவர்கள் பேசப் போவதாக கூறி இருக்கின்றார் இந்த விடயங்களை வைத்து பார்க்கும்போது இலங்கை அரசு தொடர்பாக சம்பந்தப்பட்ட விடயத்தில் சில மாற்றங்களை அவதானிக்க  கூடியதாக இருக்கின்றது.

இலங்கை அரசு இந்த மாற்றங்கள் ஊடாக இந்த அவதானிப்பு ஊடாகவும்  சிறுபான்மையின தமிழ் மக்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயங்களில் சிறுபான்மை மக்கள் எந்த காலத்தில் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியான செயற்பாடு மாற்றங்களைக் கொண்டுவந்து சிறுபான்மையினரை வெல்ல வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கின்றேன்.

கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி அதில் பல விடயங்களை ஆராய்ந்தாலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அதிகாரப் பரவலாக்கல் பங்கீடு தொடர்பாக 13 ஆவது திருத்த  சட்டம் தொடர்பாக முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட விடயங்கள் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக வாழ்த்துகின்றோம் வரவேற்கின்றோம். இந்த விடயங்களை உணர்ந்து இலங்கை அரசு முழு நாட்டிற்கும் நன்மை அளிக்கக்கூடிய 3 இனத்திற்கும் நன்மை பெறக்கூடிய எல்லாம் மாகாண சபைக்கும் நன்மை கிடைக்கக்கூடிய இந்த 13ஆவது சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது கூடிய செயல் வடிவங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

முதல்கட்டமாக மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும்ஃ. மாகாணசபை தேர்தல் நடத்தி அந்த மாகாண சபையை மக்களாட்சியை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தான் குறிப்பாக 13 ஆவது சட்டத் திட்டங்களை அமுல்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் தென்படும்.

குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் சுயாட்சி 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ்ஈழம்  என்று பல கருத்துக்கள் எமது சமூகத்திற்குள் கடந்த காலத்தில் முட்டி மோதினாலும் தற்  சமய நடைமுறைச் சாத்திய 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் பட்சத்தில் சிறுபான்மையினர் நன்மை பெறுவார்கள் என்ற நிலையில் இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை ஆவண செய்து அதில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44