தற்போதைய உலகில் பலரும் தங்களின் விருப்பப்படி உணவுகளை சாப்பிட்டு விட்டு உடல் எடையை பராமரிக்காமல் விட்டுவிடு கிறார்கள். ஆரோக்கியத்திற்கு கேடு என்று மருத்துவர்களை நாடும் போது அவர்களோ முதலில் உங்களின் உடல் எடையை குறைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சி எடுங்கள் என்று அறிவுரை கூறிவிடுகிறார்கள். உடனே தன் நண்பர்களின் வட் டாரத்திலோ அல்லது இணையத்திலோ சென்று உடனடியாக உடல் எடையை குறைக்

கும் சில வழி முறை களைப் பற்றி தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு பேலியே டயட், ஹெர்பல் டயட், கிரீன் டீ டயட், க்ராஷ் டயட் என சில உணவு முறைகள் குறித்து அறிந்து கொள் கிறார்கள். இதில் க்ராஷ் டயட்டைப் பற்றி தற்போது காண்போம்.

முதலில் உடல் எடையை குறைப்பதற்காக நீங்கள் க்ராஷ் டயட்டை மேற்கொள்கிறீர்கள் என்றால், அதனால் உடல் எடை குறையாது என்று தீர்மானமாக தெரிவிக்கிறார்கள் ஊட்ட சத்து நிபுணர்கள். க்ராஷ் டயட் என்ற உணவு முறையில் சில உணவு வகைகளை சுத்தமாக சாப்பிடவேக்கூடாது என்று கண்டிப்புடன் வலியுறுத்துகிறது. இதனால் உடலுக்கு அத்தி

யாவசியமாகத் தேவைப்படும் சில ஊட்டச் சத்துகள் எம்முடைய உடலுக்கு கிடைக்காமற் போகின்றன. இந்த நிலையில் உடல் தனக்கு தேவைப்படும் சக்தியை உங்களின் தசை நார்களை சிதைத்து அதிலிருந்து பெற்றுக்கொள்கிறது. தசை நார்கள் சிதைக் கப்படுவதால் உடலின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. சிலருக்கு உடல் தொள தொள என்றாகிவிடுவதையும் காணலாம்.

அத்துடன் இத்தகைய உணவுமுறையை அதிகநாட்களுக்கு பின்பற்ற முடியாது.மறுபடியும் வழக்கமான உணவு முறைக்கு மாறும் போது, உடல் எடை இயல்பை விட விரைவிலேயே அதிகரித்துவிடக்கூடும். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற் பயிற்சியின் மூலம் வாரத்திற்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரையிலான எடை குறைப்பது தான் ஆரோக்கியமான எடை குறைப்பு முறை எனப்படுகிறது. இதனை பின்பற்றும் போது தான் உடல் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை வராமல் தடுக்க இயலும்.

அதே சமயத்தில் சிலர் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்று நம்புகிறார்கள். இதுவும் தவறு. உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தேவையோ அதனை நேரந்தவறாமல் சாப்பிடவேண்டும்.. அதே போல் காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. காலை உணவை சரியாக சாப்பிடுபவர்களின் உடல் எடை அதிகரிப்பதில்லை. அவர்கள் ஒரு நிலையில் தங்கள் உடல் எடையை பராமரிக்கிறார்கள்.

சிலர் உடல் எடையை அதிகரிக்கும் என்று கூறி நட்ஸ் எனப்படும் பருப்புகளை தவிர்ப்பார்கள். இதுவும் தவறு. முந்திரி, பாதாம், வேர்கடலை போன்ற பருப்புகளை ஒரு அளவுடன் எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது வாரத்திற்கு ஒரு கோப்பை அளவிற்கு இதனை சாப்பிடலாம்.

வேறு சிலர் உடல் எடையை அதிகரிக் கும் என்றுகூறி கொர்போஹைட்ரேட் சத்து அதாவது மாவு சத்துள்ள பொருளைத் தவிர்ப்பார்கள். இதுவும் தவறு. உருளைக் கிழங்கை வேகவைத்து சாப்பிடும் போது அவை உடலுக்கு சத்தாகிறது. அதையே எண்ணெயில் பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கிறது.

ஆகவே உடல் எடையை குறைப்பதற்காக உங்களில் யாரேனும் கிராஷ் டயட் எடுத்துக் கொண்டிருநதால் அதனால் தொடக்க நிலையில் நல்ல பலன்கள் கிடைத்தாலும, இறுதியில் உடல் எடை வழக்கத்தை விட அதிகமாகும் என்று ஊட்டசத்து நிபுணர்கள் பரிந்துரைப்பதால், உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான டயட்டை கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

தொகுப்பு: அனுஷா