கல்வியமைச்சர் அரச வைத்திய அதிகாரிகளுக்கு எதிராக பூதாகரமான விடயங்களை பரப்புகிறார்.!

Published By: Robert

19 Sep, 2016 | 09:59 AM
image

தற்­போது அரச வைத்­தி­யர்­களின் பிள்­ளை­களை சேர்த்­துக்­கொள்­வதில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சினை தொடர்­பிலும், இது தொடர்­பாக கல்­வி­ய­மைச்சில் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது வைத்­தி­யர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட இடை­யூ­றுகள் மற்றும் அரா­ஜ­கத்­தன்மை தொடர்பிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சுகா­தார அமைச்­சரும் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அச்­சங்கம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வெளி­நா­டு­களில் பணி­பு­ரிந்­து­விட்டு மீள இலங்­கைக்கு வந்­துள்ள வைத்­தி­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கு உரிய தேசிய பாட­சா­லை­களை வழங்­கக்­கோரி கடந்த வாரம் கல்­வி­ய­மைச்சில் இரவு முழு­வதும் தங்­கி­யி­ருந்து ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­டி­ருந்தோம். இதன்­போது கல்­வி­ய­மைச்சில் உள்ள அதி­கா­ரி­க­ளினால் எமது வாக­னங்­க­ளுக்கு சேதம் விளை­வித்தும், உண­வுப்­பொ­ருட்­களை கொண்டு வர விடா­மலும் பல இடை­யூ­று­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

எங்­க­ளது கோரிக்­கை­களை கொஞ்­சமும் பொருட்­ப­டுத்­தாது ஏற்­ப­டுத்­தப்­பட்ட இவ்­வா­றான அரா­ஜ­கத்­தன்­மை­யான தாக்­கு­தல்கள் மிகவும் கண்­டிக்­கத்­தக்­க­வை­யாகும்.

வளங்­களை பிர­ப­ல­மான பாட­சா­லை­க­ளுக்கு மட்டும் வழங்கிவிட்டு கிரா­மப்­புற பாட­சா­லை­களை புறக்­க­ணித்­த­மைக்கு கல்­வி­ய­மைச்­சரும் முன்னாள் அர­சி­யல்­வா­தி­க­ளுமே கார­ண­மாவர்.

நாட்டில் உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளையும் அபி­வி­ருத்தி செய்­தி­ருப்­பார்­க­ளாயின் நாம் பிர­பல பாட­சா­லை­களை நோக்கி சென்­றி­ருக்க தேவை­யில்லை. அவ்­வா­றி­ருக்கும் போது தற்­போது நாம் எமது பிள்­ளை­க­ளுக்கு பிர­பல பாட­சா­லை­களை தேடு­வதை கல்­வி­ய­மைச்சர் எமக்­கெ­தி­ராக ஊட­கங்­க­ளி­னூ­டாக பூதா­க­ர­மாக காண்­பிக்க முனை­கின்றார்.

இந்­நி­லையில் பாட­சா­லை­களின் கல்வி உரிமை தொடர்­பிலும் பிள்­ளை­களின் இட­மாற்றம் தொடர்­பிலும் கருத்து தெரிவிக்கும் ஆசிரிய சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07