டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்களை தேர்ந்தெடுக்க இன்று ஓமானுடன் பலப்பரீட்சை நடத்தும் இலங்கை

Published By: Vishnu

07 Oct, 2021 | 10:53 AM
image

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் டி-20 உலக கிண்ண போட்டிகளுக்கு தயாராகும் நோக்கில் ஓமன் அணிக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் கட்டத்தில் இலங்கை இன்று (07) ஓமனை எதிர்கொள்கிறது. 

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஓமன் கிரிக்கெட் பயிற்சி நிறுவன மைதானத்தில் ஆரம்பமாகும்.

இந்த போட்டிகளின் பின்னர், இரு அணிகளும் உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் விளையாடும். 

உலகக் கிண்ணத்துக்கான 23 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியினர் திங்களன்று ஓமானுக்குப் புறப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 15 பேர் மட்டுமே டி-20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முடியும்.

ஓமானுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகளுக்கு மேலதிகமாக, உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை இன்னும் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும்.

இந் நிலையில் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்குள் பெயரிடப்படும் இறுதி அணியில் இருந்து 15 வீரர்கள் மட்டுமே டி-20 உலகக் கிண்ணத்தில் கலந்து கொள்ள முடியும். 

இன்று தொடங்கும் இரண்டு போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட 15 இறுதி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமானதாக இருக்கும்.

2019 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இருபது -20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆறாவது இடத்தைப் பிடித்த ஓமன், 2021 டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுக்குத் தகுதி பெற்று, தகுதிச் சுற்றில் B பிரிவில் விளையாடுகிறது.

பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை இந்த குழுவில் உள்ள மற்ற அணிகளாகும்.

ஜீஷன் மக்சூத் ஓமான் அணியின் தலைவராக உள்ளார், 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் மேலாளராக இருந்த துலீப் மெண்டிஸ், ஓமன் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இலங்கையின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளர் ருவான் கல்பகே அவர்களின் ஆலோசகராகவும் உள்ளனர்.

உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டியில் வென்ற அணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றைய ஓமன் அணியில் இடம் பெறுவார்கள். 

அவர்களின் முக்கிய ஆயுதம் சுழற்பந்து வீச்சாளர்கள், அங்கு இயான் கான் மற்றும் நெஸ்டர் டம்பா மிகவும் நம்பகமான பந்துவீச்சாளர்கள் ஆவர்.

இதேவேளை இலங்கை முக்கிய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா இல்லாமல் நாளைய போட்டியில் நுழையும். 

தொடக்க வீரர் குசல் பெரேரா தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்தார் ஆனால் நாளைய போட்டியில் அவர் பங்கேற்பது நிச்சயமற்றதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35