முஸ்லிம்களுக்காக பேசும் போர்வையில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுவதை அனுமதிக்க முடியாது - ஹரீஸ் ஆவேசம்

Published By: Digital Desk 4

06 Oct, 2021 | 10:45 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஊருக்கு வந்தால் தாக்குங்கள் என ஒரு தமிழ் எம்.பி. வன்முறையை தூண்டி முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேத்துகின்றார்.

இவர் தொடர்பில் முஸ்லிம் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர்.  தாக்குங்கள் என்று கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹரீஸ்  கேள்வி எழுக்கினார்.

Articles Tagged Under: ஏ.எச்.எம்.ஹரீஸ் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகமானது தமிழ், சிங்கள சமூகத்துடன் நல்லுறவுடன் வாழும் சமூகமாக உள்ளது. இந்நிலையில் தெற்கிலுள்ள ஞானசார தேரர், எமது இறைவனே  இந்த நாட்டில் நடக்கின்ற குறிப்பாக கடந்த தாக்குதலுக்கு மூல  காரணமென்று மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய  நாங்கள் எவ்வாறு நடந்துகொள்வது என்று எமது மார்க்க அறிஞர்களுடன் ஆராய்ந்த போது, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பொலிஸில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறினர். 

அதற்கமைய நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், இந்த சபையில் உள்ள வேறு ஒரு சமூகத்தவர்  , முஸ்லிம் சமூகம் தொடர்பில்  பேசுவதற்கு தடையாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. 

அவருக்கு  அந்த விடயத்தை பேசும் உரிமை இருக்கின்றது. அதற்காக ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஊருக்கு வந்தால் தாக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் கூறியமை எமது சமூகத்தில் கொதிப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு எமது சமூகத்தின் வரலாறு தெரிய வேண்டும். அவர் கடந்த கால முஸ்லிம் தலைவர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது, எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே முகம்கொடுத்து செயற்பட்டனர் என்பதனை அவர்  புரிந்துகொள்ள வேண்டும்.

தற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு  பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி   தீர்க்க முற்படுகின்ற போது, கடந்த காலத்தில் அவரின் பாட்டனார் முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் எவ்வாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சுடுங்கள் என்று கூறும்  அவதாரம் எடுத்தார்களோ அதே புதிய அவதாரத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குங்கள் என்று கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை உள்ளது என்பதுதான் நாங்கள் கேட்கும் கேள்வி.

எங்களுடைய வியர்வை, மூச்சு எமது சமூகத்தின் மீது உள்ளது. ஆனால் இரட்டை வேடம் போடுவதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது.

முஸ்லிம் சமூகம் பற்றி பேசும் நபர், வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்று கூறுகின்றார். அதனால் கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் அபிலாசைகள் தொடர்பில் பேசமுடியாது.

முஸ்லிம் சமூகம் நாட்டில் பல பிரதேசங்களிலும் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் தீவிர சிந்தனையை உருவாக்குவதற்கு இடமளிக்க முடியாது. அந்த இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறிதேனும் சிந்திக்காது அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த சபையில் முஸ்லிம் தலைவர்களுக்கு இல்லாத ஞானமா இவருக்கு வந்துள்ளது என்று கேட்க வேண்டியுள்ளது. நிதானமாக பேசக்கூடிய தலைவர்கள் பலர் இந்த சபையில் இருக்கின்றனர்.

ஆனால் ஒருவர் மட்டும் காவடி எடுத்து ஆடுவது போன்று எதை பேச வேண்டும், பேசக் கூடாது என்று தெரியாமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. வந்தான் வரத்தான் எல்லாம் எமது சமூகம் தொடர்பில் பேச இடமளிக்க முடியாது.  இது தொடர்பில் இந்த சபையில் உள்ள மூத்த முஸ்லிம் அரசியல் வாதிகளும்  கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50