NMRA இன் தரவுகள் காணாமல்போன விவகாரம் ; கைதான மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை மனு நிராகரிப்பு

Published By: Vishnu

06 Oct, 2021 | 01:58 PM
image

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை தரவுகள் (NMRA) காணாமல்போனமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த தனியார் நிறுவனமொன்றின் மென்பொருள் பொறியளார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (06) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு பிரதான நீதிவான் இந்த மனுவை நிராகரித்ததுடன், சந்தேக நபரை ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செப்டெம்பர் 28 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் திவுலபிட்டியவைச் சேர்ந்த மேற்கண்ட மென்பொருள் பொறியாளரை கைது செய்திருந்தனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் குறித்த தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி  தரின் கல்பகே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் ஒரு சிறப்பு கட்டளையைப் பயன்படுத்தி தரவுத்தளத்திலிருந்து தொடர்புடைய தரவை அழித்ததாக வெளிப்படுத்தினார்.

செப்டம்பர் 29 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கொழும்பு மேலதிக நீதிவான் சந்தேக நபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21