மகிந்தவின் இளைய மகன் ரோஹித தேர்தலில் களமிறங்கினால் எதிர்த்துப்போட்டியிடத்  தயார் - நளின் பண்டார

Published By: Gayathri

05 Oct, 2021 | 09:20 PM
image

(நா.தனுஜா)

வடமேல்மாகாணசபைத் தேர்தலில் ரோஹித ராஜபக்ஷ களமிறங்கும் பட்சத்தில் நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்.

ஏனெனில் ரோஹித ராஜபக்ஷவின் கருத்தின்படி, அவர் கணித பாடப் பேராசிரியராவார். நான் கணித பாடம் தொடர்பான கலாநிதியாவேன். 

அவர் அனுப்பிய ரொக்கெட்டுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் உருவாக்கிய சிறியளவிலான மின்னுற்பத்தி நிலையங்கள் இன்னமும் நன்கு இயங்குகின்றன.

அதுமாத்திரமன்றி அவருக்கு வடமேல்மாகாணம் தொடர்பில் தெரியுமா என்றுகூடத் தெரியவில்லை.

ஆனால் நான் அப்பகுதி தொடர்பில் நன்கறிவேன். எனவே அவருக்கெதிராக வடமேல்மாகாணசபைக்கான தேர்தலில் களமிறங்குவதற்கான சகல தகுதிகளும் எனக்கு உள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

தற்போது சர்வதேச ரீதியில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்ற 'பன்டோரா பேப்பர்ஸ்' எனப்படுகின்ற ஆவணத்தில் இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியிருக்கின்றது. 

அவர் முறைகேடான விதத்தில் சுமார் 35 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திரட்டியிருப்பதாக அந்த ஆவணத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு கண்டறியப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மை தொடர்பில் நிரூபமா ராஜபக்ஷவிடமும் அவரது கணவரான திருக்குமார் நடேசனிடமும் குறித்த ஊடகவியலாளர் அமைப்பு கடிதம் மூலம் கேள்வி எழுப்பியிருக்கின்றது. 

இருப்பினும் அதற்கு உரியவாறு பதில் வழங்கப்பட்டமை தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 

பன்டோரா ஆவணம் வெளியானதன் பின்னர் ஏனைய உலகநாடுகள் செயற்பட்ட விதத்தைப் பார்த்தோம். பாகிஸ்தான் அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளின் பெயர்களும் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து உடனடியாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். 

ஆனால் இவ்விடயம் தொடர்பில் எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இன்னமும் எதனையும் கூறவில்லை. 

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவிருக்கின்றோம். எனினும் அதுகுறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுக்கின்ற அதிகாரம் அரசாங்கத்திடமே காணப்படுகின்றது.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் அமைதிகாக்கின்ற ஊடகங்கள், ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிளவுபடப்போகின்றது என்று பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. 

உண்மையில் எதிர்க்கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை. ஆனால் எமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக சில வெளியகத்தரப்பினர் பொய்யாகக் காண்பிக்க முற்படுகின்றனர். 

இன்றளவில் கொவிட் - 19 தடுப்பூசியின் ஊடாக பெருமளவு இலாபத்தை உழைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கும்போது, சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிவருகின்றது. 

கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற தீர்மானங்களின் விளைவாகவே இன்றளவில் 13,000 இற்கும் அதிகமான உயிர்கள் தொற்றுக்குப் பலியாகியுள்ளன. அரசாங்கம் அவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றது?

அடுத்ததாக அரசாங்கம் சீனாவிலிருந்து சேதனப்பசளையை இறக்குமதி செய்தது. ஆனால் அதில் தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் காணப்பட்டமையினால் அதனைப் பயன்படுத்தமுடியாத நிலையேற்பட்டது. 

தற்போது இந்தியாவிலிருந்து உரத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இறக்குமதி செய்யப்படும் உரத்தில் தீங்கேற்படுத்தும் கூறுகள் உள்ளடங்கியிருத்தல் என்பது மிகப்பாரதூரமான விடயமாகும். அதுகுறித்து உரியவாறான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் எமது நாட்டில் உள்ளனவா? 

உரப்பற்றாக்குறையின் காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை உற்பத்திகள் வீழ்ச்சியடையும் பட்சத்தில் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும். அதுமாத்திரமன்றி உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். 

மறுபுறம் நாட்டின் வலுசக்தி உற்பத்தியைக் கையாளும் அதிகாரம் வெளிநாடொன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளினால் எதிர்வருங்காலங்களில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.

கேள்வி - மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. வடமேல்மாகாணசபைக்கான போட்டி தீவிரமானதாக இருக்கின்றது. ஒருபுறம் ரோஹித ராஜபக்ஷவும் மறுபுறம் தயாசிறி ஜயசேகரவும் போட்டியிடும் நிலையில், உங்களுடைய தரப்பிலிருந்து நீங்கள் களமிறங்குவீர்களா?

பதில் - ரோஹித ராஜபக்ஷ களமிறங்கும் பட்சத்தில் நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன். ஏனெனில் ரோஹித ராஜபக்ஷவின் கருத்தின்படி, அவர் கணிதபாடப்பேராசிரியராவார். ஆனால் அந்தப் பட்டத்தை எங்கிருந்து பெற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. 

நான் கணிதபாடம் தொடர்பான கலாநிதியாவேன். அவர் அனுப்பிய ரொக்கெட்டுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் உருவாக்கிய சிறியளவிலான மின்னுற்பத்தி நிலையங்கள் இன்னமும் நன்கு இயங்குகின்றன. 

அதுமாத்திரமன்றி அவருக்கு வடமேல்மாகாணம் தொடர்பில் தெரியுமா என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் நான் அப்பகுதி தொடர்பில் நன்கறிவேன். எனவே மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04