Taxi சேவையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மிகவும் வலுவான தொடர்பை உருவாக்கியுள்ள PickMe  அதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

PickMe கடந்த ஜுன் மாதம் தனது புதிய தொழில் நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது. மேலும் தனது  வாடிக்கையாளர்களுக்கு இலகுபடுத்தும் வகையில்PickMe தனது Applicationfis களை இரு மொழிகளில் உருவாக்கியுள்ளது.

புதிய அங்கமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான Appilcaition PickMe இன் புதிய வருடத்தின் நாடளாவிய சேவையில் முக்கிய அங்கமாக விளங்கும் PickMe யின் சேவைகள் அதன் வெளிநாட்டு போட்டியாளர்களைவிட வித்தியாசமான அனைத்து தர மக்களுக்கும் வழங்குகிறது. 

உயர்தர மட்டத்தவருக்கான கார்கள் மற்றும் ஏனைய தர மக்கள் பயன்படுத்தக் கூடிய மினி மற்றும் ஆட்டோக்களாலும் (Tuk)வழங்கப்படுகிறது.

PickMe இன் நவீன தொழில்நுட்பமானது இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இதன் வணிகத் தீர்வின் மூலமாக தொழில் முனைவர் (entrepreneur)ஆகியோருக்கு சந்தையை இலகுவாக அடைந்துகொள்ள முடியும். 

இது மிகவும் வலுவான தொடர்பை Taxi சேவையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உருவாக்குகிறது. PickMe Taxi இன் சாரதிகள் வாடிக்கையாளர்களைத் தேடி வீதியில் அலைய வேண்டியதில்லை. இதன் GPS தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களையும் Taxi சாரதிகளையும் ஸ்மார்ட் போனின் ஊடாக இலகுவில் தொடர்புபடுத்தி விடுகிறது. 

நிறுவனம் நடத்திய வியாபார ஆய்வின்படி PickMe தொழில்நுட்பத்தின் மூலமாக எரிபொருள் விரையத்தை 50 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது எரிபொருளால் சூழல் மாசடைவதை குறைப்பதோடு சாரதிகளுக்கு பொருளாதார வலுவூட்டலாகவும் அமைகின்றது.

இதுதொடர்பில், கடந்த 4 மாதங்களாக PickMe இயக்க தொழில்நுட்ப முறையின் கீழ் வாகனம் செலுத்தி வரும் சாரதி ஒருவர் கூறுகையில், 

'நான் இதற்கு முன்னர் Nano Cab மூலம் Cab சேவையை ஆரம்பித்தேன். அதன்போது எனக்கு என்னுடைய வாகனத்திற்கு Lease தொகையைக் கட்டக் கூட காசை தேடுவது கஷ்டமாக இருந்தது. அதனால் இதை எப்படியாவது சரிசெய்வதற்கு நான் தனியாக செயற்பட்டு இயங்கத் தொடங்கினேன். அது எனக்கு மிகுந்த அழுத்தத்தையும், கடினமாகவும் இருந்தது. 

எனக்கு இந்த ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு நிலைமையை சமாளிப்பதற்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. நான் என்னுடைய வியாபாரத்தை காப்பாற்றுவதற்காக ஒரு வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கும் போது இந்த PickMe நான் கண்டுபிடித்தேன். 

குறைந்த மாதங்களுக்குள் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. இப்பொழுது நான் ஒரு புதிய வாகனத்தை வாங்கியதோடு என்னுடைய பழைய வாகனத்திற்கு ஒரு வாகன சாரதியை அமர்த்தி அதற்கும் PickMe முறையையே பயன்படுத்துகிறேன். 

PickMe மூலம் எனக்கு சிறந்த இலாபத்தை அடைய முடியும் என்று நான் நினைக்கிறேன்.”

PickMe யின் தொழில்முனைவு மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jiffry Zulfer கருத்து தெரிவிக்கையில், 

இதுவரை தான் செய்த தொழில்நுட்ப வியாபார நிறுவனங்களில் PickMe யே சிறந்தது எனத் தெரிவித்தார். “நான் பல நவீன தொழில்நுட்ப திறனுள்ளதும் பங்குதாரர்களுக்கு உயரிய வருமானத்தைத் தரக் கூடியதுமான தொழில்நுட்பத் தொடக்க நிலை நிறுவனங்களில் பங்குகொண்டுள்ளேன். 

அவைகளுள் PickMe யே மிகவும் வெற்றிகரமானதாக கருதுகிறேன். இது முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்த ஒரு தொழில்நுட்ப வியாபாரமாக அமைகிறது. இது ஒரு இடத்தில் இருந்து மறு இடம் கொண்டு செல்லும் Taxi சேவையாக மட்டுமல்லாது பல அப்பாற்பட்ட வியாபார வாய்ப்புக்களையும் வியாபார  தொழில்முனைவோருக்கும் வழங்குகிறது. 

இது நூறுசதவீத இலங்கை நிறுவனமாக இருப்பதோடு இலங்கை மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு சேவைப் புரியும் சிறந்த சேவை வழங்கும் நிறுவனமாக செயற்படும்.”

அண்மையில் PickMe யில் நடந்த மேம்பாடுகள்

Business Portal - இது வியாபார நிறுவனங்களில் சேவை புரிபவர்களுக்கு இலகுவாக வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் பொறிமுறையாகும். 

இதன் மூலம் கம்பனிகள் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் பயணங்களைக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது.

ETA Sharing  – பயணப் பகிர்வு மூலமாக தனது பயணத்தை இன்னொருவர் கண்காணிப்பதற்கு உதவுகிறது. இது தனது நெருக்கமானவர்களை பாதுகாப்பான முறையில் பயணிக்க வைக்கவும் உதவுகிறது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி இடைமுகங்கள் சரியாக இரு விரிவான விஸ்தரிப்பை நிறுவனம் மேம்படுத்தியுள்ளதோடு அதனை விசாலமாக்கி அவர்களது மொழியை அடிப்படையாகக் கொண்டு தற்போது பல்வேறு இடைமுகங்களை மேற்கொண்டு வருகின்றது. 

மாறுபட்ட வாடிக்கையாளர் தளங்களின் ஆதரவு கிடைப்பதோடு PickMe செலவைக் குறைத்து பெற்றுக் கொள்ளப்படும் சேவையாக அமைகின்றது என பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.