20 அடிநீளமான இரும்பு கொள்கலனை பிணவறையாக மாற்றிய சம்பவம் கிளிநொச்சியில் பதிவு

Published By: Gayathri

05 Oct, 2021 | 04:31 PM
image

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து,  20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை  வீரர்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார்.

மாவட்ட கொவிட்-19  நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வைத்தியாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது. 

கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலையில் ஒரு சமயத்தில் 06 தெடக்கம் 07 வரையான உடலங்களை பேணுவதற்கான வசதிகளே காணப்படுவதனால்,  கொவிட் மரணங்கள் அதிகரிப்பு  மற்றும் மாவட்டத்தில் மின்தகன வசதிகள் இன்மை எரியூட்டுவதில் கால தாமதங்கள் ஏற்படுதல்  என்பவற்றால்  மரணித்தவர்களின் உடலங்கள் தேக்கமடைவது  தொடர்பில்   சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இறந்தவர்களின் உடலங்களைக் குளிரூட்டிப் பேணுவதற்குரிய  கொள்கலனை  மாவட்டச் செயலாளர் ஏற்படுத்தி கொடுத்திருந்த நிலையில் அதனை பொறுப்பேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஏற்பாட்டில்  கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி  படைச் சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆர் தனுஷன் அவர்களினால் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.என். ஹேரத் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறித்த குளிரூட்டல் வசதி கொள்கலன் ஏழாவது  இலங்கை இயந்திரவியல் மின்சார பொறியியல் படையணியின் சிப்பாய்களால் முன்னுரிமை அடிப்படையில் 11 சடலங்களை சேமிக்க கூடிய வகையில் கொள்கலன்களை பிணவறைகளாக மாற்றியமைத்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08