விவசாய நிலங்களை நாசமாக்கும் சீன உரத்தை இறக்குமதி செய்யாது இந்திய உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானம் - மஹிந்தானந்த 

Published By: Digital Desk 3

05 Oct, 2021 | 01:26 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.

எனினும் நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயாலாளருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படுவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உரத்தின் மாதிரிகளை பரிசோதனைக்கு உற்படுத்தி அவை நிராகரிக்கப்பட்டதன் பின்னரும் கப்பலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட உரங்கள் இப்போதும் இலங்கையை நோக்கி வருகின்றது.

இவை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதால் இலங்கைக்குள் பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்படும். அதேபோல் மாதிரிகளில் நிராகரிக்கப்பட்ட உரத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால் மாற்றீடாக எடுக்கும் வேலைத்திட்டம் என்ன? அதேபோல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

சீனாவில் இருந்து உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இலங்கையின் விளைச்சலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி  செய்ய தீர்மானிக்கப்பட்டது நைற்றிஜன் உரமாகும். இது இலங்கையில் பயன்படுத்தும் உரத்துடன் கலப்பதற்கு (பூஸ்ட்) பயன்படுத்துவது.

பெருபோகத்திற்கு தேவையான சகல உரமும் 10ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை வந்தடையும். சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.

எனினும் நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம், ஒரு வேலை கால தாமதமானால் மாற்று வழிகளை கையாள்வோம். எனவே எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17