கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி மக்களுக்கு பகிர்ந்தளிப்பு

Published By: Gayathri

05 Oct, 2021 | 01:58 PM
image

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியை காலபோக நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அளவிடும் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சுமார் 196 ஏக்கர் அளவான இந்தக் காணியை தமக்கு மீட்டுத் தருமாறு பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கரைச்சிப் பிரதேச செயலாளர் பாலசிங்கம் ஜெயகரன் தலைமையில் நேற்று கரும்புத்தோட்ட பிள்ளையார் கோவிலில் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து காணிகளை அளக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், பிரதேச காணி உத்தியோகத்தர் கருணா, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர், கிராமசேவையாளர் ஆகியோருடன் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு காணி அளவிடும் பணிகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

பிள்ளையார் ஆலய நிகழ்வைத் தொடர்ந்து, காணியை அளவிடும் பணிகளை  ஆரம்பித்துள்ளனர்.

நில அளவைப் பணிகள் நிறைவடைந்ததும், பிரதேச அமைப்புக்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணிகளற்ற தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு காலபோக நெற்செய்கைக்காக தலா ஒரு ஏக்கர் காணி வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் இந்தக் காணியில் படிப்படியாக கரும்புச் செய்கையை ஆரம்பித்து விரிவாக்குவதன் மூலம், கரும்புப் பாணி, சர்க்கரை உற்பத்திகளிலிருந்து பாரிய சீனி உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்குவது வரையில் பரந்தளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவரது மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22