1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

Published By: Vishnu

05 Oct, 2021 | 08:29 AM
image

புத்தளம், நுரைச்சோலை கடற்கரையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று (04) திங்கட்கிழமை மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்கரையோரப் பகுதியில் உள்ள மீன்வாடியொன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்1064 கிலோ கிராம நிறையுடைய 32 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் குறித்த மீன்வாடிக்குள் காணப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்தனர். நுரைச்சோலை நரக்களி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், உலர்ந்த மஞ்சள் மூடைகளும், சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40