வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை - அமைச்சர் ஜோன்ஸ்டன் 

Published By: Digital Desk 4

04 Oct, 2021 | 09:17 PM
image

 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை. 

வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால்  அவை கையகப்படுத்தப்படாது என அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொறடாவுமான  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அனைத்து விடயங்களிலும் அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சியே நாட்டில் உள்ளது: ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோ | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது வன்னி மாவட்ட எம்.பி.  சார்ள்ஸ் நிர்மலநாதனால் எழுப்பப்பட்ட வடக்கில் இடம்பெறும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.  கேள்வியெழுப்புகையில்,

வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனஇலாகா திணைக்களத்தின் கீழ் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அதன் அதிகாரிகள் மக்கள் தமது பிரச்சினைகளை கூற முயலும் போது, இன ரீதியில் வஞ்சிக்கின்ற செயற்பாடுகளே தொடர்ச்சியாக நடக்கின்றன.

அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முடிவு காணப் போகின்றீர்கள்?மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரிகளை அனுப்புமாறு கேட்கின்றோம் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில்,

தேசிய வன ஜீவராசிகள் காணிகளை அடையாளப்படுத்தும் போது, மக்கள் வசிக்கும் இடங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சரணாலயப் பகுதியில் தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் பரம்பரிய விவசாய நிலங்கள் இருக்கலாம். அவை கையகப்படுத்தப்படாது. அதிகளவான வனப் பிரதேசங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் அறிவிக்கப்பட்டுளள்ளளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை உங்கள் பிரதேசத்தில் மட்டுமல்ல. எங்கள் பிரதேசங்களிலும் உள்ளன.

இதனால்தான் ஜனாதிபதி இதனை சீர் செய்ய முயற்சித்தார். இதன்போது அவர் சுற்றுச் சூழலை அழிப்பதாக அவர் மீது சேறு பூசினர்.

எங்கள் பிரதேசங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. வீடு அல்லது மலசல கூடம் வனஜீவாராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள வலயத்திற்குள் உள்ளன. ஆனால் அதனை சீர் செய்ய போகும் போது, அதனை அரசியலுக்குள் கொண்டு சென்றனர்.

அத்துடன் முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டன.

அவை மட்டுமே அங்கு வனஜீவராசிகள் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை நீங்கள் கேட்டவாறு அதிகாரிகள் குழுவொன்றை நாம் வடக்கிற்குஅனுப்ப  நடவடிக்கை எடுப்போம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04