மலையக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜீவன் தொண்டமான் 

Published By: Digital Desk 4

04 Oct, 2021 | 05:56 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள, மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும்.

அதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டங்களில் உள்ள வைத்திய நிலையங்கள் செயற்பாட்டில் இல்லை. வைத்திய நிலையங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

என்றாலும்  கொவிட் நிலைமையில் மக்களை பாதுகாப்பதற்கு இந்த வைத்திய நிலையங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கி இருக்கின்றதா?.

அத்துடன் மலையகத்தில் இருக்கும் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களை தேசிய சுகாதார சேவைக்குள் கொண்டுவருவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம்.

பாராளுமன்றத்தில் இருக்கின்ற சுகாதார துறைசார்ந்த மேற்பார்வை குழுவினூடாக முற்றுமுழுதான அறிக்கை தயார் செய்து பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக இதுதொடர்பான எந்த முன்னெடுப்புக்களும் இடம்பெறவில்லை. எனவே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா?

மேலும் எமது காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளை விமர்சித்த நீங்கள் தற்போது அந்த வீடுகளை மக்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

இதற்கு ராஜாங்க அமைச்சர் பதிலளிக்கையில்,

பெருந்தோட்டங்களில் இருக்கும் வைத்திய நிலையங்கள் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன. இது அண்மையில் இடம்பெற்றதொன்று அல்ல. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. இதற்கு ஒரு தீர்வு எடுப்பதாக இருந்தால், மலையகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை குறிப்பிட்டு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும்.

மேலும் பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. அதனால் பிரஜா சக்தி கொராேனா தடுப்பூ பிரிவை உருவாக்கினோம். அதில் ஆயிரத்தி 100க்கும் அதிகமானவர்கள் தொண்டர்களாக பணி செய்தார்கள். தடுப்பூசி ஏற்ற செல்ல வசதி இல்லாதவர்களுக்கு இவர்கள் உதவி வந்தார்கள்.

அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் 699 வீடுகள்தான் பூரணமாக கட்டி மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் பதவிக்கு வந்த ஒன்றரை வருடங்களில், நீங்கள் 5வருடங்களில் செய்யாத வேலையை செய்து முடித்திருக்கின்றோம். மீதமிருக்கும் 3ஆயிரத்தி 301 வீடுகளுக்கும் தேவையான தண்ணீர், மின்சார வசதிகளை செய்துவருகின்றோம். இன்றைக்கு ஆயிரத்தி 235வீடுகளை ஒப்படைத்திருக்கின்றோம். இந்த மாதத்துக்குள் 4ஆயிரம் வீடுகளை மக்களுக்கு ஒப்படைப்போம். நீங்கள் அரைகுறையாக விட்டுச்சென்ற வீடுகளை நாங்கள் பூரணப்படுத்தி இருக்கின்றோம்.

அத்துடன் மலையத்தில் இருக்கும் வைத்திய நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளை தேசிய சுகாதார சேவைக்குள் கொண்டுவருவதற்கு கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்டிருந்த பணி தொடர்பில் ஆராய்ந்துபார்த்து  அதுதொடர்பில் இருதரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33