கிளிநொச்சி வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மாத்திரம் தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது - சன்ன ஜயசுமன 

Published By: Digital Desk 3

04 Oct, 2021 | 08:31 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்,வசீம்)

கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையில்  கடமையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள் எனவும், இந்த வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ். ஸ்ரீதரன் கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலை ஆளணி நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வலவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் சார்பாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன்   மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையில்  அங்கீகரிக்கப்பட்ட  ஊழியர்களின் 519 ஆக உள்ள நிலையில் 419  ஊழியர்களே பணியில் உள்ளனர். இவர்களில்   65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள். 35 வீதமானவர்கள் மட்டுமே தமிழ், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய  ஸ்ரீதரன் எம்.பி, கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வீதம் தமிழ் மக்கள் வாழும் நிலையில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்களாக இருப்பது எந்த வகையில் நியாயம்? இதனால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதற்கு  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையில்,

வைத்தியர்கள், ஊழியர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையிலேயே கிளிநொச்சி வைத்தியசாலைக்கான ஆளணி நியமனங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24