இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையிலே இந்திய வெளியுறவு  செயலர் வருகை தந்துள்ளார் - நாமல் ராஜபக்ஷ

Published By: Digital Desk 3

04 Oct, 2021 | 10:44 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பல நாடுகளில் இருந்து தற்போது இலங்கைக்கு பெரும்பாலானோர் வருகை தந்துள்ளனர். வருகை தந்து குறைகளை தேடி அலைபவர்களும் உள்ளனர். இந்திய வெளியுறவு  செயலாளர் குறைகளை தேடுவதற்காக நாட்டுக்கு வரவில்லை. இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் இவரது விஜயம் காணப்படுகிறது என இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம். இந்தியா இலங்கைக்கு அயல்நாடு இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மத அடிப்படையில் நல்லுறவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் காணப்படுகின்றன. அவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிடுவார்.

பல நாடுகளை சேர்ந்தோர்தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். வருகை தந்து குறைகளை தேடி அலைபவர்களும் உள்ளார்கள்.இவ்வாறான காரணத்திற்காக இவர்நாட்டுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும்வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை காணப்படுகிறது.

நாட்டின்சுயாதீனத்தன்மையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன்ஒன்றினைந்து செயற்படும்.எக்காரணிகளுக்காகவும் சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.தேசியவளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55