கொவிட் தொற்றுக்குள்ளாவோருக்கு நீண்ட கால நோய் அறிகுறிகள் - கலாநிதி சந்திம ஜீவந்தர

Published By: Digital Desk 4

03 Oct, 2021 | 10:10 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளாகும் தொற்றாளர்களுக்கிடையில் சில நீண்ட கால நோய் அறிகுறிகள் இனங்காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சீன ஆய்வில் டெல்டா தொற்றினால் 1000 மடங்கு பாதிப்பு உறுதி - கலாநிதி சந்திம  ஜீவந்தர | Virakesari.lk

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு இடையில்  3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளன.

அதற்கமைய சுவாசிப்பதில் சிரமத்திற்குள்ளாகுதல் , வயிற்று வலி,  மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி,  ஞாபக பிரச்சினைகள், சோர்வு,  தலைவலி, தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன.

இந்த நோய் அறிகுறிகளில் மனஅழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய அறிகுறிகள்  சுவாசிப்பதில் சிரமம் 8%, வயிற்று வலி 8%,

மன அழுத்தம் 15%, நெஞ்சு மற்றும் தொண்டை வலி 6%, ஞாபக பிரச்சினைகள் 4%, சோர்வு 6%, தலைவலி 5%, தசை வலி 1.5 %, ஏனையவை  7% ஆகக் காணப்படுகிறது.

இந்த நோய் அறிகுறிகளுக்கு உள்ளாவோரில் பெரும்பாலானோர் பெண் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40