'நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று' -ஆவணப்படம் சொல்லும் பாடம்

Published By: Digital Desk 2

04 Oct, 2021 | 02:51 PM
image

நா.தனுஜா

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் சோமீதரனால் இயக்கப்பட்ட 'தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று' (Land Grabbing – The Real Pandemic For TheTamils In Sri Lanka) என்ற ஆவணப்படம் கடந்த வாரம் சனிக்கிழமை (25ஆம் திகதி) இலங்கைநேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் திரையிடப்பட்டது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில், ஆவணப்படம் திரையிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவருகின்ற நில அபகரிப்பு தொடர்பில் சர்வதேச மட்டத்திலான செயற்பாட்டாளர்களின் பங்குபற்றுதலுடனான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

 

தமிழர்தம் அடையாளத்தையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் நெடுங்காலமாகப் படிப்படியாகச் சிதைத்துவரும் 'உண்மையான பெருந்தொற்றான' நில அபகரிப்பு தொடர்பில் குறிப்பிடத்தக்களவிலான புள்ளிவிபரங்களுடனும் முக்கிய தரப்புக்களின் மேற்கோள்களுடனும் வெளியாகியிருக்கக்கூடிய இந்த ஆவணப்படம், நில அபகரிப்பினால் தமது வாழ்விடங்களை இழந்து அவற்றை மீட்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராடிவரும் தமிழ்மக்களின் கண்ணீர் கதைகளையும் இயலாமையையும் பதிவு செய்யத்தவறவில்லை. 

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் 'காணி அபகரிப்பு' மற்றும் 'காணி விடுவிப்பு' என்பன முக்கிய பேசுபொருட்களாக மாறியிருந்தபோதிலும், இதற்கு முன்னரொருபோதும் பதிவுசெய்யப்படாத கோணத்தில் அதன் தீவிரத்தன்மையையும் அதனூடாக நெடுங்கால அடிப்படையில் சிதைக்கப்படும் தமிழர் வாழ்வையும் காணொளி வடிவில் பேசியிருக்கும் இந்த 'தாய்நிலம்' எதிர்வருங்காலங்களில் நில அபகரிப்பு தொடர்பான ஆவணப்படுத்தல்களில் மிகமுக்கியமானதாக நோக்கப்படும் என்றே தோன்றுகிறது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன், கிழக்கு மாகாணக் காணிகள் தொடர்பான முன்னாள் பணிப்பாளர் கதிர்காமத்தம்பி குருந்தன் ஆகியோருக்கு விசேட நன்றியை வெளிப்படுத்தி திரையில் விரிகின்ற இந்த ஆவணப்படம், இலங்கை 'சிலோன்' என்று அழைக்கப்பட்டதிலிருந்தான மிகச்சுருக்கமான ஆதிகால வரலாற்றுடன் ஆரம்பமாகின்றது. 

ஆயுதப்போராட்டம் கடந்த2009 ஆம் ஆண்டுடன் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போதிலும், இராணுவ ஆக்கிரமிப்பு, தீவிர ஒடுக்குமுறை, சிங்கள - பௌத்த பேரினவாதம், தமிழர் வாழ்விடங்களில் சிங்கள குடியேற்றத்திட்டங்கள், கலாசார சீரழிவு மற்றும் சித்திரவதைகள் என்பன இன்றுவரை தொடர்கின்றன என்பதை திரையில் நகர்கின்ற வசனங்கள் மூலம் ஆவணப்படத்தின் தொடக்கத்திலேயே பதிவுசெய்துவிடுகின்ற இயக்குநர் சோமீதரன், அடுத்ததாக நில அபகரிப்பின் தீவிரத்தன்மையை முகத்திலறைந்து காண்பிக்கின்ற காட்சிகளுக்குள் பார்வையாளர்களை அழைத்துச்செல்கின்றார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-10-03#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04