இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நேற்று முன்னதினம் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உபாதைக்குள்ளான சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே இவருடைய உடல் நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது.