மேற்கு முனையத்தின் பெரும்பாலான அதிகாரத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கி இருப்பது ஆபத்தானது - திஸ்ஸ

Published By: Vishnu

04 Oct, 2021 | 12:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனையத்தின் முழு அதிகாரத்தையும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருப்பது மிகவும் ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒருநாட்டின் துறைமுகங்கள் என்பது அந்த நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இடமாகும். எந்த நாடும் தங்கள் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லை. என்றாலும் துறைமுக அபிவிருத்தியை வெளிநாடுகளின் முதலீடுகள் உதவியுடனே மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். 

ஆனால் 51வீத பங்கை வழங்கியதுதான் தவறு. அதனால் துறைமுகத்தின் வருமானத்தில் 15வீதமே துறைமுக அதிகாரசபைக்கு கிடைக்கின்றது. ஏனைய 85வீதம் இந்திய அதானி நிறுவனத்துக்கே செல்கின்றது. இது மிகப்பெரிய அநியாயமாகும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33