ஒரு கோடியே 23 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக எடுத்து செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று  கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னை நோக்கி புறப்படவிருந்த போதே குறித்த நபர் கைது செய்யட்டார்.

அமெரிக்க டொலர், கனேடிய டொலர், யூரோ மற்றும் பிரித்தானிய பவுண் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.