நீர்வீழ்ச்சி அருகே ஆபாச படம் : இளைஞன் - யுவதிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

02 Oct, 2021 | 01:45 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை , பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச  காணொளியை தயார் செய்து இணையத்தில்  பதிவேற்றிய சம்பவத்தில், அந்த ஆபாசக் காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும்  10800 ரூபா அபராதமும், 3 மாதா சிறைத் தண்டனையும் விதித்த பலாங்கொடை நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க சிறைத் தண்டனையை 4 வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

குறித்த  சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு குறித்த இளைஞன்  - யுவதியை  கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி  முன் தினம் மாலை 4.30 மணியளவில் கைதுசெய்து  பொலிஸ் பிணையில் விடுவித்தனர். 

செப்டம்பர் 16 ஆம் திகதி பலாங்கொடை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் பொலிஸ் பிணையளிக்கப்பட்டிருந்தது.

 அதன்படி  கடந்த 16 ஆம் திகதி பலாங்கொடை மன்றில் ஆஜரான குறித்த இருவரும் தம் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் குறித்த தீர்ப்பு நேற்று ( 1) வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

 இதன்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட  மஹரகமை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபரான  புகைப்பட கலைஞரும்   எல்பிட்டியவை சேர்ந்த தற்போது பன்னிப்ட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயது அழகுக் கலை நிலைய  ஊழியரும் மன்றில் ஆஜராகினர்.

 குறித்த இருவருக்கும் எதிராக 1983 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க ஆபாச வெளியீடுகள் சட்டத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 285,286 ஆம் அட்த்தியாயங்களின் கீழும் தண்டனைக்குரிய குற்றமொன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே, அக்குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்தே தீர்ப்பளித்த நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க, குறித்த இருவருக்கும் 10800 ரூபா அபராதமும், 4 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46