பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடுவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் :முதலமைச்சர்

Published By: Priyatharshan

17 Sep, 2016 | 06:30 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இரண்டொரு மாங்களில் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை தீயினால் எரிந்து அழிந்துள்ள சந்தையை பார்வையிட்ட பின்னர் வியாபாரிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

நட்டஈடு தொடர்பில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு எங்கிருந்து பணம் பெறுவது, என்ன செய்வது என்பது தொடர்பில் ஒரு மயக்க நிலை உள்ளது. இருந்தபோதும் ஓரளவுக்கு எங்கிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதனை நாம் அடையாளப்படுத்தியிருக்கின்றோம். எனவே அவர்களுக்கு கொடுக்க கூடிய நட்டஈடு தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஒவ்வொருவரும் எவ்வளவு நட்டத்தை அடைந்திருக்கின்றார்கள் என்பதை பார்த்து நட்டஈட்டை வழங்க கூடிய நிதி நிறுவனங்களுடனும் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்த அவா், இங்கு தீயணைப்பு வசதிகள் இல்லாமையே பெரும் அனர்த்ததிற்கு வழிகோளியுள்ளது. கரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு வசதிகள் வழங்கமாட்டார்கள் அதற்கு சட்டத்தில் இடமில்லை. 

ஆனால் கரைச்சி பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறொரு அனர்த்தம் ஏற்படாத வகையில் இங்கு ஒரு தீயணைப்பு படையை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அத்தோடு உடனடியாக இன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இருபதாயிரம் ரூபா உடனடி நிவாரனத்தை வழங்குகின்றோம். இரண்டாவதாக மிக விரைவில் மீண்டும் வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கும் வகையில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வழங்க்கப்படும் எனவும்தெரிவித்த முதலமைச்சர், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்கள் தொடர்பில் அவர்களுடன் பேசி சில சலுகைகளை பெற்று தருவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற பாரிய மோசடியே புதிய திட்டங்களுக்கு நிதியை பெற்றுக்கொள்வதில் தடங்கல்களை ஏற்படுத்துகிறது. இருந்து போதும் சந்தைக்கான நிரந்த கட்டடம் அமைத்து தருவதற்கும் நாம் முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44