கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்களுக்கிடையில் மோதல் 

Published By: Digital Desk 2

01 Oct, 2021 | 08:23 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

ஐரோப்பிய லீக் கால்பந்தாட்டத் தொடரின் குழு 'ஈ 'க்கான  லீக் போட்டியில் மார்செல்லி மற்றும் கெலட்டசெரி ஆகிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களின் சண்டையால் போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிக்க நேர்ந்ததாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் மார்செல்லி நகரிலுள்ள வென்டோர்மிலுள்ள   நேற்று (30) நடைபெற்ற இப்போட்டி ஆரம்பமானது 2500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் இரண்டு அணி ரசிகர்களினதும் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இப்போட்டி ஆரம்பமானது.

இப்போட்டி நடந்துகொண்டிருக்கும்போது இரண்டு ரசிகர்களும் முரண்பட்டு சண்டைப்பிடித்ததால், போட்டி 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமானது. 

சிறிது நேரம் கழித்து இரண்டு அணி ஆதரவாளர்களும் பட்டாசுகள் மற்றும் நெருப்பை பற்ற வைத்து பார்வையாளர் அரங்கிலும், மைதானத்துக்குள்ளும் வீசியதால் அரங்கம் மற்றும் மைதானத்தில் நெருப்பும், பு‍கை மூட்டமும் காணப்பட்டது. 

இதே‍வே‍ளை, இரண்டு அணி வீரர்களும் சண்டையிட்டுக் கொண்டர். மேலும், இரு அணி ரசிகர்களும் ஒருவரையொருவர் வம்புக்க இழுத்து சண்டையிட்டுக் கொண்டிருந்ததால் போட்டி தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 

எனினும், இரண்டு தரப்பினரும் தத்தமது ரசிகர்களை சமாதனப்படுத்த முயற்சி செய்த போதும், அது பலனளிக்காததால் போட்டி மத்தியஸ்தர்  பவெல் ரெக்ஸ்கோவ்ஸ்கி இப்போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்தார்.

இப்போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு கோலையேனும் அடித்திருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41