ஊவாவில் 486 பாடசாலைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - ஆளுநர் முஸம்மில்

Published By: Digital Desk 3

01 Oct, 2021 | 12:52 PM
image

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு  உட்பட்ட  486 பாடசாலைகளை  மீள ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய பாடசாலை அதிபர்களின் தலைமையில் பிரதேச சபை மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் தொற்று நீக்கம் மற்றும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்குமாறும், மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் காணப்படுவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் பாடசாலைகளுக்கு வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி உதவியாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதனை உறுதிப்படுத்துமாறும், மாணவர்களின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் எனவும் நேற்று நடைபெற்ற மாகாண கல்விப் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51