மாலாவியின் முன்னாள் துணை சபாநாயகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published By: Gayathri

01 Oct, 2021 | 01:04 PM
image

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியில் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளியான 50 வயதுடைய செல்மென்ட் ஷிவாலா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தனது பதவிக்காலம் முடிவடையும் சமயத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால், விபத்துக்குள்ளான காரை சீர் செய்வதற்கான செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துவந்தார்.

ஆனால், அந்த சமயத்தில் காருக்கான இழப்பீட்டை அவர் புதிப்பிக்காததால் அது காலாவதியானது. இதனால், காருக்கான செலவை ஏற்கமுடியாது என்று செல்மெண்ட் ஷிவாலாவின் கோரிக்கையை பாராளுமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்கு நேற்று சக்கர நாற்காலியில் வருகை தந்த செல்மென்ட் ஷிவாலா, தனது காரை சீர்செய்வதற்கான செலவை பாராளுமன்றம் ஏற்காததால் மனவேதனை அடைந்து  தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47