மலை­யக மக்கள் விட­யத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நிலைப்­பாடு என்ன? :எம்.திலகராஜ்

17 Sep, 2016 | 04:59 PM
image

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப் பணி­களில் உங்­க­ளது கட்­சியின் வகி­பாகம் என்ன?

நான் கட்சி என்ற வகையில் தொழி­லாளர் தேசிய சங்கத் தின் அர­சியல் பிரி­வான தொழி­லாளர் தேசிய முன்­ன­ணிக்கு

உரி­யவன். அதன் பொதுச்­செ­ய­லா­ளரும் கூட. ஆனாலும் உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் நாங்கள் தனிக்­கட்­சி­யாக பங்­க­ளிப்­ப­தை­விட நாம் அங்கம் வகிக்கும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் முன்­மொ­ழி­வு­க­ளையே எமது முன்­மொ­ழி­வா­கவும் கொள்­கின்றோம். இது மலை­ய­கத்­திற்­கான ஒன்­றி­ணைந்த குர­லாக அமையும் என்­பது எமது நம்­பிக்கை. தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியும் கூட தனியே கட்­சி­களின் முன்­மொ­ழி­வாக உத்­தேச அர­சியல் யோச­னை­களை முன்­வைக்­காது அதற்­கென விசேட நிபுணர் குழுவை அமைத்து நாமும் அவர்­க­ளோடு இணைந்து தயா­ரித்த யோச­னை­களை கூட்­டணி சார்பில் வழிப்­ப­டுத்தல் குழு­வுக்கும் நிபுணர் குழுவின் சார்­பாக மக்கள் கருத்­த­றியும் குழு­வி­ன­ரி­டமும் சமர்ப்­பித்­துள்ளோம்.

பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யா­கவும் செயற்­ப­ட­வுள்ள நிலையில் அந்த செயன்­மு­றையில் எத்­த­கைய குழுக்­களில் நீங்கள் அல்­லது உங்கள் கட்சி அங்கத்­த­வர்கள் அங்கம் வகிக்­கின்­றீர்கள்? அத்­த­கைய குழுக்­களில் மலை­யக மக்கள் குறித்து நீங்கள் முன்­வைத்திருக்கும் யோச­னைகள் என்ன?

பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யா­கவும் செயற்­பட ஆரம்­பித்­ததன் பின்னர் அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­காட்டல் குழுவின் உறுப்­பி­ன­ராக எமது கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் அங்கம் வகிக்­கின்றார். அதன் கீழாக அமைக்­கப்­பட்ட உப­கு­ழுக்­க­ளிலும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்றோம். அவற்றுள் 'மத்தி மற்றும் சுற்­றயல்' அதி­கா­ரங்கள் குறித்த குழுவில் அங்­கத்­தி­ன­ராக நான் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தேன். இப்­போது எங்கள் பணிகள் நிறைவுபடுத்­தப்­பட்டு வழி­காட்டல் குழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது­போல ஏனைய உப குழுக்­களும் தங்­க­ளது குழு அறிக்­கையை வழி­காட்டல் குழு­வுக்கு வழங்­கி­யி­ருக்கும் என நினைக்­கின்றேன். இனி வழி­காட்டல் குழுவில் அவை ஆரா­யப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு சபையில் முன்­வைக்­கப்­பட்டு விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

'மத்தி மற்றும் சுற்­றயல்' எனும் இந்த உப குழு மத்­திய அர­சாங்­கத்­துக்கும் சூழ­வுள்ள மாகாண, உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு மற்றும் மத்­திய அரசின் நேரடி அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமைய செயற்­படும் மாவட்ட மற்றும் பிர­தேச செய­ல­கங்கள் அவை மாகாண அர­சாங்­கங்­க­ளுடன் கொண்­டி­ருக்க வேண்­டிய தொடர்­புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­தது. இதில் அங்கம் வகித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுக்கு மேல­தி­க­மாக மாகாண முத­ல­மைச்­சர்கள், ஆளு­நர்கள், எதிர்க்­கட்சி தலை­வர்கள், மக்கள் கருத்­த­றியும் குழுவின் உறுப்­பி­னர்கள் போன்­றோரை அழைத்து அவர்­களின் கருத்­துக்­களை உள்­வாங்கி எமது அறிக்­கையை தயா­ரித்து அளித்­தி­ருக்­கின்றோம். அதி­கா­ரப்­ப­கிர்வு பற்றி பேசும் உப குழு என்ற வகையில் பல்­வே­று­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை செவி­ம­டுக்கக் கூடி­ய­தாக இருந்­தது. ஒற்­றை­யாட்­சியை வலுப்­ப­டுத்தும் கோரிக்­கை­களும் மாகாண சபை அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்தும் கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டன. சமஷ்டி

முறை குறித்த உரை­யா­டலும் இடம்­பெற்­றது.இந்த நிலை­க­ளுக்கு அப்பால் கிராம ராஜ்ய என்ற அடி­மட்ட மக்கள் பிர­தி­நி­தித்­துவ சபை குறித்தும் பேசப்­பட்­டது. மலை­யகப் பெருந்­தோட்­டங்­களின் கீழ் மக்கள் வாழும் பகு­திகள் அரச பொது நிர்­வாக முறை­மைக்குள் கொண்­டு­வ­ரப்­படல் வேண்டும் எனும் கோரிக்கை வலு­வாக முன்­வைக்­கப்­பட்­டது. மக்கள் கருத்­த­றியும் குழு­வுக்கு மலை­யகம் சார்ந்­த­தாக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­களின் யோச­னைகள் அந்தக் குழுவின் அறிக்­கையில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. அதன் சாராம்­சத்தை 'மத்தி மற்றும் சுற்­றயல்' குழுவின் அறிக்­கையில் இணைக்க நான் பரிந்­து­ரைத்தேன்.

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தின் ஊடாக மலை­யக மக்­க­ளுக்கு தனி­யான அதி­கார அலகு பற்றி வட­மா­காண சபை தீர்­மானம் நிறை­வேற்றி உள்­ளது. அது பற்­றிய உங்கள் கருத்து என்ன? மலை­யக மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு எவ்­வாறு அமைய வேண்டும் என நீங்கள் எதிர்­பார்க்­கின்­றீர்கள்?

வட மாகாண சபை நிறை­வேற்­றிய தீர்­மா­னத்­திற்கு நன்றி தெரி­விக்க வேண்டும். ஆனால் வட மாகாண சபை கட்­ட­மைக்­கப்­பட்­டுள்ள விதத்தின் அடிப்­ப­டையில் எத்­த­கைய தீர்­மா­னத்­தையும் அவர்­களால் நிறை­வேற்ற முடியும். அவர்கள் மலை­யக மக்­களைப் பொறுத்த மட்டில் இத்­த­கைய ஒரு தீர்­மா­னத்தை நிறைவேற்றும் அதி­கா­ர­மு­டைய ஒரு சபையும் அவர்­க­ளிடம் இல்லை. அர­சியல் அதி­காரம் மட்­டு­மல்ல நிர்­வாக அதி­கா­ரங்­க­ளைக்­கொண்ட ஒரு சபை­யேனும் இன்றி ஓரம் கட்­டப்­பட்ட இன­மாக மலை­யக தமிழ் சமூகம் உள்­ளது. வடக்­கினைத் தள­மாகக் கொண்ட இயங்கும் அர­சியல் அமைப்­புகள் காலத்­திற்கு காலம் பல்­வேறு வகை­யான தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளன. மலை­யக மக்­களின் வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்­ட­போது அவர்­களின் தலை­மைகள் எடுத்த தீர்­மானம், ஸ்ரீமா- சாஸ்­திரி ஒப்­பந்தம் செய்­யப்­பட்­ட­போது எடுத்­தி­ருக்க வேண்­டிய தீர்­மானம் குறித்து நாம் பரி­சீ­லிக்க வேண்­டி­யுள்­ளது. அதே­போல வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் மலை­யக மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல ஒட்­டு­மொத்த தமி­ழி­னத்­துக்கும் எத்­த­கைய விளைவைத் தந்­தது எனப் பார்க்க வேண்டும். உண்­மையில் 1987 இல் திம்பு மாநாட்டில் மலை­யக மக்கள் குறித்த தீர்­மானம் போன்று வடக்கு அர­சியல் தரப்பு காத்­தி­ர­மா­னதும் யதார்த்­த­மா­ன­து­மான வேறு தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வில்லை என்­பது எனது கணிப்பு.

இப்­போது கூட வட மாகாண சபை வடக்கு கிழக்­குக்கு வெளியே வாழும் மலை­யக மக்­க­ளுக்கு தனி­யான அதி­கார அலகு குறித்து தீர்­மானம் நிறை­வேற்­று­வ­தை­விட வடக்கில் குறிப்­பாக வன்­னியில் வாழும் மலை­யக வம்­சா­வளி தமிழ் மக்­களின் மறு­வாழ்­வுக்­கான தீர்­மானம் ஒன்றை வட மாகாண சபை நிறை­வேற்­றி­யி­ருக்­கு­மானால் அது மிகுந்த வர­வேற்­புக்­கு­ரி­யது. வன்­னியில் வாழும் மலை­யக மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள விதத்­திலும், அவர்­களின் காணி­யு­ரிமை விட­யத்­திலும் புறக்­க­ணிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. அவர்கள் தொடர்பில் தீர்­மானம் நிறை­வேற்ற மாத்­தி­ர­மல்ல சிறந்த நடை­மு­றை­களை கையா­ளவும் கூட வட மாகாண சபைக்கு அதி­காரம் இருக்­கி­ன்றது. அந்த மக்கள் வட­மா­காண சபைக்­கான தேர்­தலில் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள். ஆனால் வன்­னிவாழ் மலை­யக மக்கள் தொடர்ந்தும் கவ­னிப்­பா­ரற்று புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­பது வருத்­தத்­திற்­கு­ரி­யது.

அதே­போல இன்று தேசிய ரீதியில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக வடக்கு கிழக்கு தமிழ்த் தலை­மை­யான தமிழ் தேசியக்கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் செயற்­ப­டு­கின்றார். சம்­பந்தன் மலை­யக மக்கள் குறித்த தனது மௌனத்தைக் கலைத்து நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அது வட மாக­காண சபை தீர்­மா­னத்தை விட காத்­தி­ர­மா­ன­தாக அமையும். ஏனெனில் அவர் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்­றத்தில் மலை­யக மக்­களின் பிர­தி­நி­தி­களும் சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தி­களும் கூட அங்கம் வகிக்­கின்றார். அந்த சபையின் எதிர்­கட்சித் தலைவர் என்­ற­வ­கையில் சம்­பந்­தனின் மலை­யக மக்கள் குறித்து வெளி­யி­டக்­கூ­டிய நிலைப்­பாடு என்­பது தேசிய மற்றும் சர்­வ­தேச கவ­னத்தைப் பெறும். எதிர்க்­கட்சி பிர­தான அமைப்­பா­ள­ரான அநு­ர­கு­மார திசா­நா­யக்க மலை­யக மக்கள் குறித்த ஒரு பிரே­ர­ணையை முன்­வைத்து தமது கட்­சியின் நிலைப்­பாட்­டையும் கூட தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். தமது ஆரம்ப கால அர­சியல் நிகழ்ச்சி நிரலில் இந்­திய விஸ்­த­ரிப்­பு­வா­தத்தின் எச்­சங்கள் என புறக்­க­ணித்த அதே மலை­யக மக்­களை இன்று இலங்கை நாட்டின் தேசிய இன­மாக மலை­யக மக்­களை அங்­கீ­க­ரிக்க வேண்டும். மலை­யக மக்­களை தொட­ர்ந்தும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அழைக்க வேண்­டுமா? மலை­யக மக்­களின் அபி­வி­ருத்­திக்கு தனி­யான அதி­கார சபை வேண்டும் போன்ற அவர்­க­ளது நிலைப்­பாடு போன்­றன கவ­னத்­தைப்­பெற்­றுள்­ளன. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்போ அல்­லது எதிர்க்­கட்சி என்­ற­வ­கையில் இரா.சம்­பந்­தனோ தெளி­வு­ப­டுத்­த­வில்லை. இந்த மௌனம் கலை­யப்­படல் வேண்டும்.

எம்­மைப்­பொ­றுத்த வரைக்கும் மலை­யக மக்கள் நிர்­வாக ரீதி­யான அதி­கார அல­குகள் கட்­டா­ய­மா­ன­தாக உறு­திப்­ப­டுத்­த­படல் வேண்டும் என்­ப­தையும் 26 ஆவது நிர்­வாக மாவட்டம் மலை­யக மக்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக உரு­வாக்­கப்­படல் வேண்டும் எனவும் தெளி­வாகக் கூறி­யுள்ளோம். அதே­போல இந்த நாட்டின் ஆட்சி அதி­கார முறை மாற்­றப்­பட்டு ஒற்­றை­யாட்சி அல்­லாத அதி­கா­ரப்­ப­கிர்வு ஒன்று முன்­வைக்­கப்­ப­டும்­போது சமஷ்­டி­மு­றையோ அல்­லது அதற்கு இணை­யான வேறு ஒரு அதி­காரப் பகிர்வு முன்­வைக்­கப்­ப­டும்­போது நாட்டில் வாழும் ஏனைய இனத் தேசிய மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சம­மான அதி­கா­ரப்­ப­கிர்வு மலை­யகத் தமிழ் மக்­க­ளுக்கும் வழங்­கப்­படல் வேண்டும் என்­பதில் தெளி­வாக உள்ளோம்.

உத்­தேச தேர்தல் முறைமை எவ்­வாறு அமை­யப்­­போ­கி­ன்றது? அத்­த­கைய முறை­மையில் மலை­யக மக்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் என்ன?

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தின் ஊடாக முன்­வைக்­கப்­படும் மாற்­றங்­களில் பாரிய விட­ய­மாகப் பார்க்­கப்­ப­டு­வது தேர்தல் முறைமை மாற்­றம்தான். இந்த தேர்தல் முறை­மாற்றம் குறித்து உப குழுக்கள் ஏதும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இந்த விடயம் நேர­டி­யா­கவே வழிப்­ப­டுத்தல் குழு­வி­லேயே விவாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது. வழிப்­ப­டுத்தல் குழுவில் மலை­யக மக்­களின் பிர­தி­நி­தி­யாக எமது கூட்­ட­ணியின் தலைவர் மனோ­க­ணேசன் அங்கம் வகிக்­கின்றார்.

இது­வரை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கிடைக்­கக்­கூ­டிய தக­வல்கள் அடிப்­ப­டையில் கடந்த ஒரு வரு­டத்­திற்கு மேலாக அர­சியல் சூழலில் ஆய்வு ரீதி­யாக பேசப்­பட்டு வந்த கலப்பு முறை அறி­மு­க­மாகும் சாத்­தியம் உள்­ள­தாகத் தெரி­கின்­றது. அத்­த­கைய உத்­தேச முறை­யின்­படி தொகு­தி­வா­ரிக்கு 60 சத­வீத வாய்ப்பும் விகி­தா­சார முறைக்கு 40 சத­வீத வாய்ப்பும் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. மலை­யக மக்கள் உள்­ளிட்ட வடக்கு கிழக்­குக்கு வெளியே வாழு­கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் தங்­க­ளது இனத் தேசியம் சார்ந்த பிர­தி­நி­தி­களை தொகுதி உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­து­கொள்­வ­தற்கு உத்­தேச முறைமை பெரும் சவா­லாக அமையும் போல் தெரி­கி­றது. விகி­தா­சார முறை­மையில் தெரி­வா­னாலும் கூட அதற்­காக தேசிய கட்­சி­களில் தங்­கி­யி­ருக்கும் சூழல் உரு­வா­கலாம். எனவே வடக்கு கிழக்­குக்கு வெளியே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்­க­ளது தேசி­யத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­டாத முறைமை குறித்து ஆலோ­சிக்க

வேண்­டி­யுள்­ளது. வடக்கு கிழக்­குக்கு வெளியே ஏறக்­கு­றயை 16 லட்சம் தமிழ் மக்கள் வாழ்­கின்­றார்கள். இவர்­களுள் 90 சத­வீ­த­மானோர் மலை­யகத் தமிழ் மக்கள். எனவே இவர்­களின் எதிர்­கால பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தும ஆலோ­ச­னைகள் வெறு­மனே எண்­ணக்­க­ருக்­க­ளா­கவும் கோரிக்­கை­க­ளா­கவும் மட்­டு­மின்றி விஞ்­ஞா­ன­பூர்வ தன்­மை­கொண்­ட­தாக இருக்க வேண்டும்.

மலை­யக கட்­சிகள் மட்­டு­மல்ல முஸ்லிம் கட்­சி­களும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் கூட தேர்தல் முறை­மாற்றம் தொடர்பில் இன்னும் தெளி­வான நிலைப்­பாட்­டுக்கு வர­வில்லை என்றே தோன்­று­கி­றது. மலை­யக மக்­களைப் பொறுத்த மட்டில் வாக்­கு­ரிமை இல்­லாது அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­தி­ருந்த நிலைமை மாறி வாக்­கு­ரிமை இருந்தும் அதற்கு உரிய அர­சியல் பிர­தி­நித்­துவம் இல்­லாது தவிர்க்கும் இன­மாக மலை­யகத் தமிழர் சமூகம் மாறும் அபாயம் உத்­தேச தேர்தல் முறை மாற்­றத்தின் ஊடாக ஏற்­பட்­டு­வி­டாது பாது­காப்­பது மலை­யக சமூ­கத்தின் முன் உள்ள பாரிய பொறுப்­பாக உள்­ளது.

நேர்கண்டவர்: ஜீவா சதாசிவம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22