இலங்கை - மியன்மார் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்

Published By: Gayathri

30 Sep, 2021 | 04:29 PM
image

(எம்.மனோசித்ரா)

மியன்மாரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துதல் உட்பட நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கான மியன்மார் தூதுவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த சந்திப்பின்போது மியன்மாரின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துதல் உட்பட நாட்டில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினார்.

இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகள் நினைவு கூரப்பட்ட அதேவேளை, இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூண்கள் பௌத்தமும் கலாச்சாரமுமாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

மியன்மார் மக்களின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் அவை அவசியமாதலால், மியன்மாரிலுள்ள அனைத்தையும் உள்ளடங்கிய ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அது வலுவாக ஆதரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47