இலங்கையில் மொபைல் புரோட்பான்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Hutch, “Dial Tunes” என்ற மற்றுமொரு முன்னெடுப்பை தொழிற்துறையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.

‘Dial Tunes’ மூலமாக Hutch வாடிக்கையாளர்கள், அழைப்பொன்றை மேற்கொள்ளும் வேளையில் அந்த அழைப்பிற்கு பதில் கிடைக்கும் வரை காத்திருக்கும் போது வழமையான அழைப்பு தொனியை செவிமடுப்பதற்குப் பதிலாக, தமக்கு பிடித்தமான பாடல்களை கேட்கும் வசதியை தொழிற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த விசேட சேவையை இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனமாக Hutch திகழ்கின்றது.

“369” IVR மற்றும் USSD போன்ற பல்வேறு வழிமுறைகளினூடாக Dial Tune சேவைகளை மிகவும் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இச்சேவைக்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூபா 3 மற்றும் உரிய வரி அறிவீடு மட்டுமே.

Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா, இது தொடர்பில் கூறுகையில்,

“மொபைல் புரோன்பான்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு தொழிற்பாட்டாளராக நாம் வளர்ச்சிகண்டு வருகின்ற நிலையில், மேம்பாடடைந்து வருகின்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற Hutch நிறுவனம், நவீன சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது.

தொலைபேசி தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் கடந்த 100 ஆண்டுகளாக அழைப்பு காத்திருப்பு தொனி (dial ringing tone) என்ற அம்சத்தில் மேம்பாடுகள் எதுவும் நிகழாத நிலையில், இதற்கு முன்னோடியாகத் திகழ்வதையிட்டு Hutch மிகவும் பூரிப்படைந்துள்ளது.

“இலங்கையில் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலவிடும் பணத்திற்கான உண்மையான பெறுமதிக்கான உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்கிவருவதன் மூலமாக இன்று மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற வலையமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக Hutch திகழ்ந்துவருகின்ற நிலையில் அது தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு பாகமே இந்த அறிமுகமாகும்”.