அரச வருமானத்தை உயர்த்த சிகரெட் வரியை அதிகரிக்க வேண்டும் : 89.3 வீதமான பொதுமக்கள் தெரிவிப்பு - ஆய்வில் தகவல்

Published By: Gayathri

30 Sep, 2021 | 11:38 AM
image

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது (ADIC)> எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிகரட் மீதான வரி அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வொன்றை நடத்தியது. 

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் (25) உள்ள 331 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொரு மாவட்டங்களிலும் 20 வயதிற்கும் மேற்பட்ட சனத்தொகை அளவை கருத்திற்கொண்டு ஆய்வின் மாதிரித் தொகை தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில் 3958 பேர் இவ் ஆய்வின் மாதிரியாக கணக்கிடப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.  

2021 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை, வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும், வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பாலினத்தவரிடமும் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. 

இந்த ஆய்விற்காக 981 பெண்களிடமும் 2977 ஆண்களிடமும் தகவல்கள் பெறப்பட்டன.  

ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுள், 21வீதமானோர் 20 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டோராகவும் 50 வீதமானோர் 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோராகவும், 29 வீதமானோர் 40 வயதிற்கும் அதிகமானோர் ஆவர். 

 

ஆய்வின்போது, ஆண்களின் புகைத்தல் பாவனை தொடர்பான தகவல்களை கேட்டறிந்தபோது அவர்களில், 31வீதமானோர் தற்போது புகைத்தலில் ஈடுபடுபவர்களாகவும், 26 வீதமானோர் புகைத்தல் பாவனையை நிறுத்தியவர்களாகவும் மற்றும் 43 வீதமானோர் எப்போதும் புகைத்தலில் ஈடுபடாதோர் ஆவர். 

 

அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்காக வரியை அதிகரிக்க நேரிட்டால் சிகரட், உணவுப்பொருட்கள், மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றுள் எதற்கு வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என வினவியபோது 91.5வீதமானோர் சிகரட்டிற்கு வரி அதிகரிக்கப்டுவதை விரும்புவதாக தெரிவித்திருந்தனர். 

 

அரசாங்கம் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளில் இருப்பதால், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக சிகரட் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்தால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தொர்பில் ஆய்விற்கு உட்படுத்தியோர்களிடம் வினவிய போது, 89.3வீதமானோர் ஏற்றுக்கொள்வோம் என பதில் அளித்திருந்தனர். 

இக்கேள்விக்கு பெண்களின் பதிலை மாத்திரம் பகுப்பாய்வு செய்தபோது 98.3 வீதமான பெண்கள் இம்முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தனர் 

 

சிகரட் வரியை அதிகரிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டோர் மத்தியில், அவ்வாறு சிகரட் வரியை அதிகரிக்க நேரிட்டால் ஒரு சிகரட்டிற்கான வரித்தொகை எந்தளவு தொகையால் அதிகரிக்கப்படவேண்டும் என்ற கருத்தை ஆராய்ந்தபோது, ஆய்விற்குட்படுத்தியோர்களில் சிகரட் ஒன்றிற்கான விலை ரூபா25 விடவும் அதிகமான தொகையால் உயர்த்தப்பட வேண்டும் என 59.1வீதமானோர் தெரிவித்திருந்தனர்.

 

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக சிகரட் மீதான வரியை அதிகரிக்க நேரிட்டால் அதற்கான ஆதரவை வழங்குவீர்களா? என்ற கேள்விக்கு, 88.4வீதமானோர் தமது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

 

சிகரட் மீதான விலையை அதிகரிக்கும் போது சிகரட் பாவனை பலவீனப்படுத்தப்படுகிறதா? (குறைவடைகிறதா?) என்ற வினாவிற்கு 76.3வீதமானோர் சிகரட் மீது விலையேற்றம் இடம்பெற்றால் பாவனை குறைவடையும் என்பதால் அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.  

 

அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும், சேவைகளினதும் வரி மற்றும் விலைகள் கடந்த சில வருடங்களாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியமற்ற பொருளான சிகரட் மீதான வரியை அரசாங்கம் அதிகரிக்காமைக்கான காரணம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தபோது, 52.2வீதமானோர் சிகரட் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதில்லை என தெரிவித்திருந்தனர்.

32.8 வீதமானோர் புகையிலை நிறுவனத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களினால் சிகரட் வரி அதிகரிப்பு தடைப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தனர். 

 

சிகரட் வரியை அதிகரிப்பதனூடாக சுகாதார சேவையைக் கட்டியெழுப்புவதற்காகவும், கொவிட் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் சிகரட் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 88.5வீதமானோர் தெரிவித்திருந்தனர். 

 

இந்த ஆய்வின் முடிவுகளை ஆராந்து பார்க்கும்போது, சிகரட் மீது வரியை அதிகரிப்பதற்கு அதிகமானோர் தங்களது விரும்பத்தை தெரிவிக்கின்றனர் என்பதோடு இதற்கான பூரண ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கவும் தயாராகவுள்ளனர். 

இது தொடர்பாக அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும் என்பதை நாட்டின் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அரசாங்கம் சிகரட் வரி அதிகரிப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை எனவும், புகையிலை நிறுவனத்தின் அழுத்தங்களே இவ்வாறு வரி அதிகரிப்பு தடைபடுதலுக்கு காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். 

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் கணிப்பின் படி கடந்த 02 வருடங்களில் சிகரட் ஒன்றின் வரி ரூபா 20ஆல் அதிகரித்திருப்பின் அரசாங்கத்திற்கு சராசரியாக ரூபா100 பில்லியன்கள் வருமானமாக பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. 

நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த நிலைமையில் இன்னுமொரு இழப்பை சந்திக்காமல் இருப்பதற்காகவும், அவ்விழப்பை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்கும், பொது மக்களின் சலுகைகளை வழங்குவதற்கும், இம்முறை நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் சிகரட்டிற்கான வரியை ஆகக்குறைந்தது 20 ரூபாவால் அதிகரித்து அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது இவ் ஆய்வின்போது நிரூபனமாகியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04